தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
- பின்னணி : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்காக, மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.81,500 கோடிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA)
- MGNREGA திட்டம் 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இது ஒரு மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டமாகும் (Centrally Sponsored Scheme).
- இத்திட்டம் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
- ஊரகக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதியளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கிராமப்புறங்களில் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்துவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
- பதிவு செய்யப்பட்ட ஊரகக் குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) இதில் பயன்பெறலாம்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டப் பிரிவு 27-இல்கீழ் மத்திய அரசின் உத்தரவுகளை மாநிலங்கள் பின்பற்றாவிட்டால், அந்த மாநிலங்களுக்கு நிதி நிறுத்திவைக்கப்படும்.
விக்சித் பாரத்- கியாரண்டி – ரோஸ்கர் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) (VB-G RAM G)
- புதிய திட்டத்தின்படி, வேலை உறுதியளிப்பு நாட்கள் 125-ஆக உயர்த் தப்பட்டுள்ளது.
- திட்டச் செலவில் மத்திய – மாநில அரசுகள் இடையே 60:40 என்ற புதிய நிதிப்பகிர்வு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- புதிய திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளும் நிறைவடையும் வரை முந்தைய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

