தேசிய திட்டங்கள்

மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி

  • நாட்டின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மின்னணு உதிரி பாகங்கன் படற்பத்தித் திட்டத்தின்கீழ் (இசி எம்எஸ்) ரூ.7.172 கோடி முதலீட்டில் 17 புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த 17 திட்டங்களின்மூலம். கேமரா மாட்யூல் கனெக்டர் கன், மல்டி-லேயர் பிசிபி (அச் சுப் பலகைய ஆம்ஸிலேட்டர்கள், மின் உறைகள் போன்ற முக்கியமான பாகங்களின் உற்பத்தியில் ஒட்டுமொத்தமாகரூ.65.111கோடி மதிப்புக்கு உற்பத்தி நடக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐபில் சர்க்யூட் இந்தியா, ஏகுஸ்கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் யூனோ மிண்டா. ஏசக்ஸ் சேஃப்டி காம்போ னென்ட்ஸ் இந்தியா ஜெட்ஃபேப் இந்தியா டி.இ கனெக்டிவிட்டி இந்தியா, மீனா எலக்ட்ரோடெக் ஆகிய முக்கிய நிறுவனங்கள் ஈடுபடும் இந்தத் திட்டங்கள் மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
  • இந்தியா ஒரு பெரிய மின்னணு உற்பத்தி எமயமாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன. 

இறக்குமதி ஒப்பந்தம்

  • இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கான ஒரு வருட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • 2026 ஆம் ஆண்டு ஒப்பந்த ஆண்டிற்கு அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து இந்தியா ஆண்டுக்கு சுமார் 2.2 மில்லியன் டன் (எம்டிபிஏ) எல்பிஜியை பெறும் என்று அவர் கூறியுள்ளார்
  • இது “இந்திய சந்தைக்கான அமெரிக்க எல்பிஜியின் முதல் கட்டமைக்கப்பட்ட ஒப்பந்தமாக” அமைகிறது.
  • இந்தியா அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு 50% வரிகளை எதிர்கொண்டுள்ளதற்கும், பல இந்திய அமைச்சர்கள் இந்தியா அமெரிக்காவிலிருந்து அதிக எரிசக்தியை இறக்குமதி செய்ய விரும்புவதாகக் கூறியதற்கும் எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

16-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு

  • மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரிகள் பகிர்ந்தளிக்கும் கொள்கையை உருவாக்கும் பொறுப்பை உடைய 16-ஆவது நிதிக் குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
  • மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி மற்றும் மானியங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்கான புதிய அளவுகோல்களை இந்த அறிக்கை வரையறுக்கும்.
  • 2026-27-ஆம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த அறிக்கை அமலுக்கு வரவுள்ளது. 
  • 16-ஆவது நிதிக்குழுவின் தலைவர் ரவிந்த் பனகாரியா மற்றும் பிற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.
  • முன்னதாக என்.கே. சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழு. 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டுகாலத்துக்கு மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பரிந்துரை செய்திருந்தது. 
  • 16-ஆவது நிதிக் குழு. கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம்தேதி உருவாக்கப்பட்டது. 
Next Current Affairs தேசிய திட்டங்கள் >