தேசிய திட்டங்கள்

சர்வ சிக்ஷா அபியான் (SSA)

  • சர்வ சிக்ஷா அபியான் (SSA) இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உலகளாவிய தொடக்கக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சேச்செட் (SACHET) செயலி

  • புயல் காலங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கைப்பேசி செயலி சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளது
  • இந்தியக் கடலோர பகுதிகளில் கடல்சார் பல்வகை அபாயகால பணிகள் குறித்த மாநாடு சென்னையில் நடைபெற்றது.
  • மீனவர்கள் தங்களின் கைபேசிகளை சைலண்ட்டில் வைத்திருந்தாலும் புயல் மற்றும் இதர இயற்கை சீற்றங்கள் பற்றிய எச்சரிக்கை ஒலியை எழுப்பும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட் டுள்ளது.
  • எல்லா விதமான வானிலை எச்சரிக்கைகளை பெறுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சேச்செட் (SACHET) செயலி

சமுத்திரா செயலி

  • பெருங்கடல் தகவல் சேவைகளுக்கு இந்திய தேசிய மையத்தால் உருவாக்கப்பட்டது .

பயோகேர் திட்டம் (BioCARe Programme)

  • உயிரி தொழில்நுட்பத் துறையின் (DBT) பயோகேர் திட்டம் 2011-ல் தொடங்கப்பட்டது. இது உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பெண்களை ஆதரிப்பதற்கும் முன்னேற்றுவதற்கும், குறிப்பாக தொழில் இடைவெளிக்குப் பிறகு அவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான மானியத்தை வழங்குவதற்கும் அமைந்தது.
  • இந்த திட்டம் பெண்கள் அறிவியல் முக்கிய நீரோட்டத்தில் மீண்டும் நுழைவதை ஊக்குவிப்பதோடு, சுதந்திர ஆராய்ச்சி நிதியுதவியைப் பெறுவதற்கும் அறிவியலில் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கான தொடக்க மேடையாகவும் அமைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்யமந்திரி மகளிர் ரோஸ்கார் யோஜனா

  • மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு தனது விருப்பப்படி தொழில் தொடங்க நிதி உதவி வழங்குவது.
  • இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு முதல் தவணையாக ₹10,000 வழங்கப்படும்.
Next Current Affairs தேசிய திட்டங்கள் >