தேசிய திட்டங்கள்

மாற்றியமைக்கப்பட்ட UDAN திட்டம்

  • பின்னணி: பிரதமர் சமீபத்தில் ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்து, மாற்றியமைக்கப்பட்ட UDAN திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மாற்றியமைக்கப்பட்ட UDAN திட்டம் பற்றி

  • நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில், தற்போது பயன்பாட்டில் இல்லாத அல்லது சேவை வழங்கப்படாத விமான ஓடுதளங்களை 100 விமான நிலையங்களாக மேம்படுத்துவதற்கு 12,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டுடன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • கூடுதலாக, 3,661 கோடி முதலீட்டில் 200 நவீன ஹெலிபேடுகள் (ஹெலிகாப்டர் இறங்குதளங்கள்) உருவாக்கப்படும்; மேலும், பிராந்திய விமானச் சேவைகளைத் தொடர்ந்து செயல்படுத்த விமான நிறுவனங்களுக்கு 10,043 கோடி ‘சாத்தியக்கூறு இடைவெளி நிதியுதவி’ வழங்கப்படும்.
  • இத்திட்டம், போதிய சேவை இல்லாத மற்றும் தொலைதூரப் பகுதிகளில் செயல்பாடுகளுக்காக HAL துருவ் மற்றும் டோர்னியர்  போன்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.

UDAN திட்டம் பற்றி

  • ‘உடே தேஷ் கா ஆம் நாகரிக்’ (UDAN) திட்டம் என்பது, சேவை வழங்கப்படாத மற்றும் போதிய சேவை இல்லாத பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் அக்டோபர் 2016-ல் தொடங்கப்பட்ட ஒரு பிராந்திய இணைப்புத் திட்டமாகும் (RCS).

நோக்கங்கள்:

  • Tier-2 மற்றும் Tier-3 நகரங்களுக்கு இடையே பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல்.
  • சாதாரண குடிமக்களுக்கு விமானப் பயணத்தை மலிவு விலையில் கிடைக்கச் செய்தல்.
  • சீரான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • பயன்படுத்தப்படாத மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத விமான நிலையங்களின் உள்கட்டமைப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துதல்.
  • இத்திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
    • முதலாவதாக, ரயில் பயணத்திற்கு 10-18 மணிநேரம் ஆகும் குறுகிய பிராந்திய வழித்தடங்களில் விமானப் பயணத்தை மலிவு விலையில் கிடைக்கச் செய்தல்.
    • இரண்டாவதாக, சேவை வழங்கப்படாத மற்றும் போதிய சேவை இல்லாத விமான நிலையங்களை (அதாவது ஓடுதளங்கள் இருந்தும் திட்டமிடப்பட்ட வணிக ரீதியான விமானச் சேவைகள் இல்லாத இடங்களை) மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருதல்.
  • முதல் UDAN விமானம் 2017 ஏப்ரல் 27 அன்று சிம்லாவையும் டெல்லியையும் இணைக்கும் வகையில் தனது பயணத்தைத் தொடங்கியது.

முக்கிய அம்சங்கள்

  • போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறை மூலம் விமான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  • குறைந்த லாபம் தரும் வழித்தடங்களில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு ‘சாத்தியக்கூறு இடைவெளி நிதியுதவி’ (VGF) வழங்கப்படுகிறது.
  • இதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) விமான நிலையக் கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
  • அதே நேரத்தில், மாநில அரசுகளும் பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் தீயணைப்பு வசதிகளை இலவசமாக வழங்குகின்றன.
  • 50% இருக்கைகள், ஒரு மணி நேர விமானப் பயணத்திற்கு சுமார் 2,500 என்ற நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.
  • தொலைதூர, மலைப்பாங்கான மற்றும் தீவுப் பகுதிகளை இணைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. 
  • இதனை விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) மூலம் நிர்வகிக்கிறது; ஏலம் விடுதல், கண்காணிப்பு மற்றும் விமான நிறுவனங்களுக்கான ‘சாத்தியக்கூறு இடைவெளி நிதியுதவி’ ஆகியவற்றை வழங்குவதில் இந்த ஆணையம் செயல்படுத்தும் முகமையாகச் செயல்படுகிறது.

 

நஷா முக்த் பாரத் அபியான் (NMBA)

  • பின்னணி: போதைப்பொருள் பயன்பாட்டிற்கான தேவையை குறைப்பதற்கான முதன்மை அமைச்சகமாகச் செயல்படும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE), ‘போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை’ (NAPDDR) அறிமுகப்படுத்தியுள்ளது. இது போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான கட்டமைப்பாகும்.
  • இம்முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, 2020-ல் ‘நஷா முக்த் பாரத் அபியான்’ (NMBA) தொடங்கப்பட்டது. இது ‘போதைப்பொருள் இல்லாத இந்தியாவை‘ உருவாக்கும் மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க அமைந்துள்ளது.

நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) பற்றி

  • நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) என்பது விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றின் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நாடு தழுவிய ஒரு பிரச்சாரமாகும்.
  • இது முக்கியமாக போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
  • தொடங்கப்பட்ட தேதி: 15 ஆகஸ்ட் 2020.
  • செயல்படுத்துபவர்: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE).

நோக்கங்கள்

  • போதைப்பொருள் தேவையை குறைத்தல்: விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கல்வி மற்றும் சமூக அளவிலான செயல்பாடுகள் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல்.
  • சமூகப் பங்கேற்பு: போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இளைஞர்கள், பெண்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஈடுபாட்டை ஊக்குவித்தல்.
  • சிகிச்சை மற்றும் மறுவாழ்வு: போதைப்பொருள் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குதல்.

முக்கிய அம்சங்கள்

  • குறிக்கோள் மாவட்டங்கள்: தேசிய ஆய்வுகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) தரவுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட, பாதிப்புக்குள்ளாகக்கூடிய 272 மாவட்டங்களில் இது செயல்படுத்தப்படுகிறது.

முப்பரிமாண உத்தி:

  • விநியோகத்தைக் குறைத்தல் – NCB-யின் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது.
  • தேவையைக் குறைத்தல் – MoSJE-யின் விழிப்புணர்வு மற்றும் சமூக அளவிலான செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
  • சிகிச்சை மற்றும் மறுவாழ்வு – சுகாதார அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகிறது.
  • சமூகம் சார்ந்த அணுகுமுறை: மூத்த அரசு அதிகாரிகளின் தலைமையிலான மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • தொழில்நுட்பப் பயன்பாடு: விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களைச் சென்றடைவதற்கு NMBA செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • பொதுமக்கள் பங்கேற்பு: போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ , ‘பிரம்ம குமாரிகள்’ மற்றும் ‘இஸ்கான்’  போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. முக்கியத்துவம்
  • மேம்பட்ட பொது விழிப்புணர்வு: ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 18 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • திறன் மேம்பாடு: நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட முதன்மை தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • சமூக நன்மைகள்: போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் குறைக்க உதவுகிறது, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை ஊக்குவிக்கிறது மற்றும் சமூக நலனை வலுப்படுத்துகிறது.

 

Next தேசிய திட்டங்கள் >

People also Read