பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)
உணவு பதப்படுத்துதல் துறையை ஊக்குவிப்பதற்காக, மத்திய அமைச்சரவை பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) என்ற முதன்மை திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 31,920 கோடி அதிகரித்து T6,520 கோடியாக உயர்த்தியுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)
சம்பதா (விவசாய-கடல்சார் பதப்படுத்துதல் மற்றும் வேளாண்-பதப்படுத்துதல் குழுக்களின் மேம்பாடு) என்ற மத்திய துறை திட்டம் மே 2017 இல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
இத்திட்டம் இப்போது “பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)” என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.
முக்கிய அமைச்சகம்: உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம்
· நோக்கம்: விவசாயத்திற்கு துணை நிற்பது, பதப்படுத்துதலை நவீனமயமாக்குவது மற்றும் விவசாயக் கழிவுகளை குறைப்பதே PMKSY இன் நோக்கமாகும்.
PMKSY இன் கூறுகள்
✓மெகா உணவு பூங்காக்கள்
ஒருங்கிணைந்த குளிர்பதன சங்கிலி, மதிப்பு கூட்டல் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு
உணவு பதப்படுத்துதல்/பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல்/விரிவாக்குதல்
வேளாண் பதப்படுத்துதல் குழுக்களுக்கான உள்கட்டமைப்பு
V பின்னோக்கு மற்றும் முன்னோக்கு இணைப்புகளை உருவாக்குவதற்கான திட்டம்
✓உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி உள்கட்டமைப்பு
மனித வளங்கள் மற்றும் நிறுவனங்கள்

