தேசியத் திட்டங்கள்

ஏகலைவா மாதிரிப் பள்ளிகள்

  • சூழல்: நிலப் பிரச்சினைகள் காரணமாக ஏகலைவா பள்ளிகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் செயல்படாமல் உள்ளன. இதனால், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் நிலத்தைப் பெறுவதை உறுதி செய்யும் வரை புதிய பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் பற்றி

  • இது 1998 ஆம் ஆண்டு பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தால் (MoTA) தொடங்கப்பட்ட ஒரு முதன்மைத் திட்டமாகும். இது தொலைதூர மற்றும் பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் உள்ள பட்டியல் பழங்குடியின (ST) மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசமான, தரமான உறைவிடக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • நோக்கம்; விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் திறன் பயிற்சி உள்ளிட்ட முழுமையான வளர்ச்சியுடன் கூடிய CBSE அடிப்படையிலான கல்வியை வழங்குவதன் மூலம், பழங்குடியின மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களிடையே உள்ள கல்வி இடைவெளியைக் குறைப்பதாகும்.
  • மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் ;
  • இத்திட்டம் அதன் எல்லையை விரிவாக்கம் செய்ய 2018–19 இல் மறுசீரமைக்கப்பட்டது.
  • இப்போது, 50% க்கும் அதிகமான பழங்குடியின மக்களைக் கொண்ட மற்றும் குறைந்தது 20,000 பழங்குடியினரைக் கொண்ட தொகுதிகளில் (Blocks) EMRS பள்ளிகள் நிறுவப்பட உள்ளன. இதன் இலக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் 728 பள்ளிகள் ஆகும்.
  • EMRS பள்ளிகள், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
  • பழங்குடியினக் கல்விக்கான பிற முயற்சிகள்:
  • இராஜீவ் காந்தி தேசிய பெல்லோஷிப்
  • தொழிற்பயிற்சி மையங்கள்
  • தேசிய வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டம்
  • போஸ்ட்-மெட்ரிக் கல்வி உதவித்தொகை
Next Current Affairs தேசிய திட்டங்கள் >