தமிழ்நாடு விவகாரங்கள்

கலை வித்தகர்’ விருது

  • கலைவித்தகர் விருது பெற விரும்பும் திரைத்துறையினர் நவ.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழசு அரசு அறிவித்துள்ளது.
  • தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ 2022-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
  • இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.
  • விருதுக்கான தகுதிகள்: நடிகர், நடிகையர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடகி, ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், கலை இயக்குநர், ஒலிப்பதிவாளர், சண்டைப் பயிற்சியாளர், நடன ஆசிரியர், ஒப்ப னைக் கலைஞர் மற்றும் தையற் கலைஞர் என தமிழ்த் திரைப்பட உலகுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்குஇவ்விருது வழங்கப்படுகிறது

உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்

  • முதல்வரின் உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கிவைக்கவுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
  • வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த 20 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், 1,000 ‘முதல்வரின் உழவர் நல சேவை’ மையங்களுக்கு 30 சதவிதம் மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசு சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் சேவை மையங்களுக்கு 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்தவர்களில் வங்கிகளில் கடன் பெறும் வகையில் 973 பயனாளர்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
  • இதில், இதுவரை 413 பேருக்கு வங்கிக் கடன் கிடைத்துள்ளது..
  • நலசேவை மையங்களை திறம்பட நிர்வகிக்க 15 நாள்களுக்கு அரசு சார்பில் உரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஒற்றை செல் ஓமிக்ஸ்’ பயன்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகம்

  • சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான ஒற்றை செல் ஓமிக்ஸ்’ பயன் பாட்டு (ஸ்காட்) ஆராய்ச்சி ஆய்வகத்தை இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி நிறுவுகிறது.
  • நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் இந்த ஆய்வுகத்தை நிறுவ சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு ஐஆர் எஃப்சி ரூ.10.83 கோடி வழங்கியுள்ளது.
  • அதிநவீன கருவிகளுடன் கூடிய ஸ்காட் ஆய்வகம், புற்றுநோய், இதய நோய், தொற்று, அழற்சி, வளர்சிதை மாற்றம். இதர தொற்றாத நோய்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கால நோயறிதல், பயோ மார்க்கர் கண்டுபிடிப்பு, மருந்து பரிசோதனை ஆகியவற்றை எளிதாக்கும்.

தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதம் ரூ.50,000 உதவித்தொகை

  • தமிழ்நாடு ஆவனக் காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து, தமிழ்நாட்டில் பெருமை மிகு வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் ஓராண்டுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1633 ஆம் ஆண்டு முதலான புத்தகங்கள். 1670ஆம் ஆண்டு முதலான அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 
  • தமிழகத்தின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது. 
  • இதை மாறிவரும் காலத்துக்கேற்ப மீளுருவாக்கம் செய்யவும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட செய்தி ஆகும்.

வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

  • சரக்குகளைக் கையாள்வதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளதாக, துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.
  • வ.உசி. துறைமுகம் நிகழாண்டு அக்டோபரில் மட்டும் 3.94மில்லியன் டன் சரக்குகளையும், 75.110 டிஇயு சரக்குப் பெட்டகங்களையும் கையாண்டுள்ளது. 
  • கடந்த ஆண்டு அக்டோபரில் கையாளப்பட்ட 3.55 மில்லியன் டன்கள் சரக்குகள், 62.158 டிஇயு சரக்குப் பெட்டகங்களுடன் ஒப்பிடுகையில் இவை முறையே 10.94 சதவீத, 20.83 சதவீத வளர்ச்சியாகும்.
  • நிதியாண்டில் அக்டோபர் வரை மொத்தம்25.23 மில்லியன் டன் சரக்குகளையும், 5,03,204 டிஇயு சரக்குப்பெட்டகங்களையும் துறைமுகம் கையாண்டுள்ளது. 
  • இது, 2024-25-ஆம் நிதியாண்டில் அக்டோபர் வரை கையாளப்பட்ட 24.56 மில்லியன் டன் சரக்குகளையிட மொத்த சரக்குப் போக்குவரத்தில் 2.71 சதவீதம் அதிக வளர்ச் சியையும், 4,64,060 டிஇவு சரக்குப் பெட்டகங்களைவிட 8.44 சதவீத அதிக வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
  • நிகழாண்டு அக்டோபர் வரை 1,064 கப்பல்கள் கையாளப்பட்டுள்ளன
  • கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,004 கப்பல்கள் கையாளப்பட்டன.

 

மக்களைத் தேடி மருத்துவம்

அம்சம் விவரம்
தொடக்கம் 05 ஆகஸ்ட் 2021 (கிருஷ்ணகிரி) 
நோக்கம் வீடுகளுக்கு சென்று மருத்துவ சேவை வழங்குதல் தொற்று அல்லாத நோய்கள் அடிக்கடி பாதிக்கும் நிலைகளை முன்னேற்று சிகிச்சை செய்தல்
செயல்படுத்தும் துறை தமிழ்நாடு அரசு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை
சேவைகள் பரிசோதனை, மருந்து வழங்கல், இயன்முறை சிகிச்சை, நோய் ஆதரவு சேவை, டயாலிசிஸ் உதவி 
இலக்கு குழு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இயலாமை உள்ளவர்கள், தொடர்ச்சியான மருந்து எடுத்துக்கொள்வதில் சவால் உள்ளவர்கள் 

கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி துறை விருது 

  • தமிழ்நாடு அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், சிறந்த கைவினை கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்ட 131 பேருக்கு ரொக்கப் பரிசு, தங்கப்பதக்கம், சான்றிதழ்கள் ஆகியவற்றை கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி துறை அமைச்சர் 17.11.25 அன்று வழங்கி கவுரவித்தார்.
  • செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த சிறந்த கைவினை கலைஞர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான பூம்புகார் விருதுகள் வழங்கும் விழா 17.11.25 அன்று நடைபெற்றது. 

பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது 

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 16 வகையான கைத்திறன் தொழிலில் 70 பெண் கைவினை கலைஞர்கள் உட்பட 131 பேருக்கு வழங்கப்பட்டன.

எகிப்தின் பண்டைய துறைமுக நகர அகழ்வாராய்ச்சி 

  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தின் பண்டைய துறைமுக நகரமான பெரெனிகேயில் அகழ்வாராய்ச்சிக்காக ஒரு சர்வதேச குழுவில் இணைவது பற்றிய செய்திக் கட்டுரையாகும். 
  • தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையிலான பண்டைய கடல்சார் வர்த்தக தொடர்புகளுக்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதே இதன் நோக்கமாகும். 
  • இந்த இடத்தில் முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் ஏற்கனவே கிடைத்தன, இது இந்த வரலாற்று தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தின் பெரெனிகேயில் அகழ்வாராய்ச்சிக் குழுவில் இணைந்துள்ளனர்.
  • இந்தத் திட்டம் தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையிலான பண்டைய வர்த்தகத்தின் கூடுதல் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெரெனிகே மற்றும் குசைர் அல்-காதிம் போன்ற செங்கடல் துறைமுகங்களில் முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கொண்ட மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன.
  • தற்போதைய அகழ்வாராய்ச்சி சீசன் டிசம்பர் 17 வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
Next Current Affairs தமிழ்நாடு விவகாரங்கள் >