தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு அம்ச திட்டம்
- இந்தத் திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல் படுத்தப்படும். படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்
- அம்சங்கள்
- மருத்துவ உதவி: நுரையீரல் மற்றும் தோல் நோய்கள் போன்ற தொழில்சார் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தல்.
- காப்பீடு மற்றும் இறப்பு சலுகை: ரூ. 5 லட்சம் காப்பீடு; பணியின் போது மரணம் ஏற்பட்டால் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் கிடைக்கும்.
- சுயதொழில் உதவி: வணிகத்திற்கு 35% மானியம் (ரூ. 3.5 லட்சம் வரை); சரியான நேரத்தில் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு 6% வட்டி மானியம்; ஆண்டுதோறும் ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது.
- கல்வி உதவி: தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி, விடுதி மற்றும் புத்தகங்களுக்கான நிதி உதவி.
- வீட்டுவசதி: 3 ஆண்டுகளில் 30,000 நகர்ப்புற அலகுகள்; “கலைஞர் கனவு இல்லம்” என்பதன் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- காலை உணவு: உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு.
வெற்றிப் பள்ளிகள் திட்டம்
- தமிழகத்தில் முதல் கட்டமாக நிகழ் கல்வியாண்டில் ரூ.111 கோடி ஒதுக்கீட்டில், 236 வட்டாரங்களில் வெற்றிப்பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- தமிழக அரசு சார்பில் அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மூன்று ஆண்டுகளில் மாவட்டத்துக்கு ஒன்று என தற்போது 38 உண்டு உறைவிட மாவட்ட மாதிரிப் பள்ளிகள் செயல் பட்டுவருகின்றன.
- கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மாவட்ட உண்டு உறைவிடமாதிரிப் பள்ளிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கென வெற்றிப் பள்ளிகள்திட்டம் (vibrant educational targeting Reputed institutions) பள்ளிக் கல்வித் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 414 வட்டாரங்களில் 500 வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளித் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். திறன்மிகு வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகள் அங்கு வழங்கப்படும்.
- ஒவ்வொரு வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள் ளித் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். திறன்மிகு வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகள் அங்கு வழங்கப்படும்.
- சிறப்பம்சங்கள்
- அப்பள்ளியில் வாரந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தயாரிப்பாக பயிற்சித் தாள்கள், காணொலிப் பாடங்கள் மற்றும் ஆசிரியர்களின் நேரடிப் பயிற்சி வகுப்புகள் ஆகியவை அங்கு வழங்கப்படும்.
- அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சிவகுப்பில் இணைந்து பயன்பெறலாம்.
- வெற்றிப் பள்ளிகள் மூலமாக ஏறத்தாழ 50 ஆயிரம் மாண வர்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளிமாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
அரசு ஊழியர் நலன் காக்கும் புதிய திட்டம் மற்றும் நிதியுதவி
- அரசு ஊழியர்கள் பணியின் போது விபத்தால் உயிரிழக்க நேர்ந்தாலோ, விபத்தின் காரணமாக மாற்றுத்திறன் படைத்தவராக மாறினாலோ காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதியும், உயிரிழந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் 2 மகள்கள் இருந்தால் ரூ.10 லட்சம் வரை நிதியுதவியும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சம் வரையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சுதந்திர தின உரையில் தமிழ்நாடு முதல்வர் – 9 புதிய அறிவிப்புகள்
- மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.21 ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500-லிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி அளிக்கப்படும்.
- வீரபாண்டிய கட்டபொம்மன், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, சிவகங்கை மருது சகோதரர்கள், வ.உசிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- இரண்டாவது உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுள்கால மாதாந்திர நிதியுதவி ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- இரண்டாவது உலகப்போரில் பங்கேற்று மறைந்த வீரர்களின் துணைவியருக்கு வழங்கப்படும் ஆயுள்கால மாதாந்திரநிதியுதவி ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி ரூ.22 கோடியில் கட்டப்படும்.
- தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையமும், மண்டல அளவில் இரண்டும், மாவட்டத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்படும்.
- கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போதே, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற இணையவழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
- மலைப்பகுதி பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணத் திட்டம்:
- மலைப் பகுதிபேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண மில்லாத விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்

