காலை உணவு திட்டம்
- காலை உணவுத் திட்டம் நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
- தொடக்கம் : 2022-ஆம் ஆண்டு செப். 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது.
- விருவாக்கம் :
- திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில்
- தொடர்ந்து, ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆரோக்கியம் மேம்பாடு:
- காலை உணவுத் திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
உழவர் நல சேவை மையம்
- முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம்.
உழவர் நல சேவை மையங்கள் பற்றி :
- உழவர்களின் நலன் காக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு உதவும் வகையில் 1,000 முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என நிகழாண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
- இத்திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான உழவர் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீதம் அதாவது ரூ.3 லட் சம் முதல் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குள்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் வங்கியில் கடன் ஒப்புதல் பெற்று “AGRISNET ‘’ இணையதளத்தில் உரிய மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு
- தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெறவுள்ளது.
- இத்தேர்வில் தமிழகம் முழுவதும் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வாயிலாக மாதந்தோறும்ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
-
- இத்தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு உதவிபெறும் பள்ளிமாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
- இத்தேர்வில் தமிழகம் முழுவதும் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வாயிலாக மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
- இத்தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
‘அகல்விளக்கு’
- இணையப் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஏராளமான ஆக்க பூர்வ பயன்கள் இருந்தாலும், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து நடைபெறும் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
- பள்ளி மாணவிகளுக்கு இணையம் தொடர்பான குற்றங்களை அறிவுறுத்த, ‘அகல்விளக்கு’ என்ற பெயரிலான கையேடு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் வெளியிடப் பட்டிருக்கிறது.
- இதில் இணையத்தில் ஒருவரின் அடையாளத்தை மறைத்து மிரட்டி பணம் பறித்தல், ஆபாசமாக சித்தரிப்பது, வெறுப்பு பேச்சு, சட்டவிரோத தகவல்களைப் பரப்புவது போன்ற இணையவழி மோசடிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
- இணையக் குற்றவாளிகளின் பிடியில் சிக்கிக் கொள்வோர் அதிலிருந்து மீண்டுவர எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் குறித்தும் பள்ளி அளவிலேயே கற்றுத்தரப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது.
- அதன்படி, தற்போது வெளியிடப்பட்ட ‘அகல்விளக்கு’ கையேட்டில் இதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
- ஆபாசப் படங்களை யாரேனும் அனுப்புதல், சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட நபர் குறித்து தவறான செய்தி, புகைப்படங்களைப் பகிர்தல் போன்றவற்றை எதிர்கொள்வது குறித்தும், இணையக் குற்றங்களின் வகைகள் குறித்தும் ‘அகல்விளக்கு’ கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.
- இதில் குறிப்பிடப்பட்டுள்ள 10 கட்டளைகளை மாணவிகள் பின்பற்றினால் பாதுகாப்பான இணையப் பயன்பாட்டைப் பெறலாம்.
புராஜெக்ட் பள்ளி
- கோவை மாவட்டக் காவல் துறையால் கொண்டுவரப்பட்ட ‘புராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
- மேலும், தற்காப்புக்கலை, பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு போன்றவை இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
- போலீஸ் அக்கா
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தமிழக காவல் துறையால் தொடங்கப்பட்ட போலீஸ் அக்கா என்ற திட்டம் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்திலும் இணையம் தொடர்பான குற்றங்களே அதிகம் விசாரிக்கப் பட்டன.
- பெண் காவலர்களின் கைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களைத் தொடர்பு கொண்டு தீர்வு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண் காவலர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்லூரிகளுக்குச் சென்று மாணவிகள் மத்தியில் இணையக் குற்றம் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மகளிருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்
- புது தில்லியில் நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு நீதிபதி வர்மா ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசால் மகளிருக்கான கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அதன்படி, தமிழகத்தில் ‘181’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது.
வாழ்ந்து காட்டுவோம்
- தமிழ்நாடு கிராமப்புற தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுக் கட்டமைப்பை ஊக்குவிக்கும் வாழ்ந்து காட்டுவோம் என்ற தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்தின் கீழ் 3,994 கிராமங்களில் வசிக்கும் 3,77,367 பேர் பயனடைந்ததாக தரவுகள் கூறுகின்றன.
ராஷ்ட்ரீய கிருஷிவிகாஸ் யோஜனா’ திட்டம்
- வேளாண்மை மற்றும் அதன் கூட்டுத் துறை புத்துணர்வுக்கான ராஷ்ட்ரீய கிருஷிவிகாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் 2019-ஆம் ஆண்டு முதல் 85 விவசாய புத்தொழில்களுக்கு ரூ.8.98 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- கிராமப்புறங்களில் தொழில் முனைவோரின் நிதித் தேவைகளை மானிய வடிவில் தீர்த்து வைக்கும்
- தகவல் மற்றும் பயன்பாட்டு மையங்களைக் கொண்ட கிராமப்புற தொழிற்பேட்டை உள்கட்டமைப்பு போன்றவை கிராமப்புறத் தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
உயர்வுக்குப் படி
அரசு, சென்னை, ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 மற்றும் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பயின்று தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத, உயர்கல்விக்கு விண்ணப்பித்து பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராத 4,691 மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பைத் தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கு வதற்காக நான் முதல்வன்
- உயர்கல்விவழி காட்டி திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி” முகாம் சென்னை மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

