சிறந்த நபர்கள்

அய்யா வைகுண்ட சுவாமிகள்

    • வைகுண்ட சுவாமிகள் (1809-1851) கன்னியாகுமரிக்கு அருகில், இன்று சாமித்தோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தாகோவில்விளை எனும் கிராமத்தில் பிறந்தார்.
    • முடிசூடும் பெருமாள் என்ற இவரின் பெயருக்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரின் பெற்றோர் அவருடைய பெயரை முத்துக்குட்டி என மாற்றினார். 
    • வைகுண்டசுவாமிகள் ஆங்கிலஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சியென்றும்” கறுப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும் விமர்சித்தார்.
    • அவருடைய சமயவழிபாட்டு முறை ‘அய்யாவழி’ என்றறியப்பட்டது.
    • அவருடைய கருத்துக்கள் அகிலத்திரட்டு என்ற நூலாகத் திரட்டப்பட்டுள்ளது. 
    • 1836ல் சமத்துவ சமாஜத்தை நிறுவினார்.
  • அவரது 194வது அவதார தினம்  மார்ச் 4, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • ‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ என்பது அவரது கூற்றாகும்.
< Previous Current Affairs Next சிறந்த நபர்கள் >