நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உயர்ந்த, குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்கள் இடையே அதிக இடைவெளி காணப்படுகிறது என்று சுமன் பெரி தெரிவித்தார்.
நாட்டின் 26 சதவீத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் வருவாய் கொண்ட மாநிலங்கள், நாட்டின் ஜிடிபி-க்கு 44 சதவீதம் பங்களிக்கின்றன அதேநேரம், 38 சதவீத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்த வருவாய் மாநிலங்கள், வெறும் 19 சதவீதமே பங்களிக்கின்றன.
கடந்த 2017-18ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2022-23-இல் மொத்த வேலைவாய்ப்பு 15 கோடி அதிகரித்துள்ளது.
இதில் விவசாய பெண் தொழிலாளர்கள் 8 கோடி பேர், ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளர்கள் 4 கோடி பேரும் அடங்குவர் என்று சுமன் பெரி தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஒரு நாட்டின் எல்லைக்குள், ஒரு குறிப்பிட்ட காலத்தில் (பொதுவாக 1 ஆண்டு), உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பு.
வகைகள்
Nominal GDP – சந்தை விலையில்
Real GDP – பணவீக்கம் சரிசெய்து.
V Per capita GDP – ஒருவருக்கு சராசரி
இந்தியாவில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO)
GDP-ஐ கணக்கிடுகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் மனிலா, பிலிப்பைன்ஸ்-இல் உள்ளது.
நோக்கம்: ஆசியப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம்.
உறுப்பினர் நாடுகள்: 68 நாடுகள் (48 ஆசியா மற்றும் 20 பிற நாடுகள்).
தமிழகத்திற்க்கு கிடைத்த நன்மைகள்
தமிழ்நாடு நகர்ப்புற முன்னேற்றம் : நீர் விநியோகம், கழிவு நீர், வடிகால் அமைப்புகள்.
சாலை மேம்பாடு : தொழிற் பகுதிகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள்.
சூரிய சக்தி திட்டங்கள் : திறந்த அணுகல் சூரிய மின் நிலையங்கள்.
சமூக நலத்திட்டங்கள் : ஏழை மக்கள் வீடுகள், சமூக மேம்பாடு.

