131-ஆவது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா
- பின்னணி : மக்களவையில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை 2029 பொதுத்தேர்தல் முதலே அமல்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- இதன் மூலம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 543-இல் இருந்து 815-ஆக உயர்த்தப்பட உள்ளது.
- இந்த முன்மொழிவின்படி, மாநிலங்களுக்கு 815 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்கள் வழங்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
- அதிகரிக்கப்படும் 815 இடங்களில், 33 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மகளிருக்கு 272 தொகுதிகள் ஒதுக்கப்படும்.
- இந்த இடஒதுக்கீட்டில் பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியின (ST) பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
- கடந்த 2023-இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே அமலாக்க முடியும் என்பதால், 2034-க்கு முன் இடஒதுக்கீடு வழங்க முடியாத நிலை இருந்தது; அதைத் தவிர்க்கவே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- தென் மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் 129-இல் இருந்து 195 ஆக உயர்த்தப்படும்
- தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.76% இலிருந்து 23.87% ஆக சிறிய அளவில் அதிகரிக்கும்
| மாநிலங்கள் | தற்போதைய எண்ணிக்கை | 543 தொகுதிகளில் சதவீதம் | 50% அதிகரிப்பு (உத்தேசமாக) | புதிய எண்ணிக்கை (815-இல் சதவீதம்) |
| கர்நாடகம் | 28 | 5.15% | 42 | 5.145 |
| ஆந்திரம் | 25 | 4.60% | 38 | 4.65% |
| தெலுங்கானா | 17 | 3.13% | 26 | 3.18% |
| தமிழ்நாடு | 39 | 7.18% | 59 | 7.23% |
| கேரளம் | 20 | 3.68% | 30 | 3.67% |
| மொத்தம் | 129 | 23.76% | 195 | 23.87% |
தொகுதி மறுவரையறை
- மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையே தொகுதி மறுவரையறை ஆகும்.
- இது அனைத்து வாக்காளர்களின் வாக்கு மதிப்பும் சமமாக இருப்பதை உறுதி செய்வதுடன், பிரதிநிதித்துவத்தில் நிலவும் பிராந்திய சமமின்மையைத் திருத்துகிறது.
- இந்தியாவில், இந்த பணி இந்திய தொகுதி மறுவரையறை ஆணையத்தால்மேற்கொள்ளப்படுகிறது.
அரசியலமைப்பு விதிகள்
- சரத்து 82: ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் ஒரு ‘தொகுதி மறுவரையறை சட்டத்தை’ இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
- சரத்து 170: மாநில சட்டப்பேரவைகளுக்கான தொகுதிகளைப் பிரிப்பது குறித்து விளக்குகிறது.
- சரத்து 330: மக்களவையில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை மறுநிர்ணயம் செய்தல்.
- சரத்து 332: மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை மறுநிர்ணயம் செய்தல்.
- சரத்து 327 : நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
- சரத்து 329(a) : தொகுதி மறுவரையறை உத்தரவுகளை எந்த நீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்கு தொடர முடியாது.
அமைப்பு மற்றும் நியமனம்
- தொகுதி மறுவரையறை ஆணையம், இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறது.
- உறுப்பினர்கள்: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி (தலைவர்), தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்கள் இதில் இடம் பெறுவர்.
- இது நிர்வாகத் தலையீடு இன்றி சுயேச்சையாக இயங்குகிறது.
- இதன் உத்தரவுகள் சட்டத்திற்கு இணையான வலிமை கொண்டவை.இவற்றை நாடாளுமன்றமோ அல்லது மாநிலச் சட்டமன்றங்களோ மாற்றியமைக்க முடியாது.
நடப்பு தகவல்கள்- எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது “ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” என்ற நூலில், அண்ணாதுரையின் இலக்கியம், கலை, மொழி, பொருளாதாரம் மற்றும் சமூகம் குறித்த நிலைப்பாடுகள் மிகவும் எளிமையானவை என்றும், அவை “முட்டாள்களையும் ரவுடிகளையும்” திருப்திப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் வாதிட்டார்.
- இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ஏப்ரல் 16 அன்று போரி பந்தர் (மும்பை) முதல் தானே வரை இயக்கப்பட்டது. சுமார் 400 பயணிகளுடன், 14 பெட்டிகளைக் கொண்டு 34 கி.மீ தூரத்தை இந்த ரயில் கடந்தது. இந்திய ரயில்வேயின் அடித்தளத்தை அமைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் 173 ஆம் ஆண்டு விழா 2026 இல் கொண்டாடப்படுகிறது.

