இந்திய அரசியல்

கூடுதல் மானியக் கோரிக்கைகள் 

  • சூழல்: 2025–26 நிதியாண்டுக்கான இரண்டாவது கூடுதல் மானியக் கோரிக்கைகளை மக்களவை நிறைவேற்றியுள்ளது. இந்தச் செயல்பாட்டின் போது, மத்திய நிதியமைச்சர் ‘பொருளாதார நிலைப்படுத்தல் நிதியை’ (Economic Stabilisation Fund – ESF) நிறுவ முன்மொழிந்துள்ளார்.

பொருளாதார நிலைப்படுத்தல் நிதி (ESF)

  • முன்மொழியப்பட்ட இந்த ESF-க்கு 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
  • உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகள், எதிர்பாராத விநியோகச் சங்கிலிச் சீர்குலைவுகள் மற்றும் பிற வெளிப்புற நெருக்கடிகளை இந்தியா கையாள்வதற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

கூடுதல் மானியக் கோரிக்கைகள் பற்றிய தகவல்கள்

  • ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில், நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி, ஒரு குறிப்பிட்ட சேவைக்கு போதாமல் போகும்போது, அரசு கோரும் கூடுதல் நிதியே இதுவாகும்.
  • இக்கோரிக்கையை குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைப்பார். நிதியாண்டு முடிவதற்கு முன்பாக இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  • பகுதி V, சரத்து 115ல்  கூடுதல் மானியங்கள் அல்லது மிகை மானியங்கள் (Supplementary, additional or excess grants).
< Previous Current Affairs Next இந்திய அரசியல் >