இயற்பியல் புவியியல்
பாம்பா ஆறு
- நாட்டின் பிரதான ஆறுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பல கோடி ரூபாய் முயற்சியான தேசிய ஆறு பாதுகாப்புத் திட்டத்தின் (NRCP) கீழ் பாம்பா ஆற்றைச் சேர்க்க மத்திய அரசு சமீபத்தில் நடவடிக்கைகளைத் தொடங்கியது.
- இது பெரியாறு மற்றும் பரதப்புழா ஆறுகளுக்குப் பின் கேரள மாநிலத்தின் மூன்றாவது நீளமான ஆறாகும்.
- ‘தக்ஷிண பாகீரதி’ அல்லது கேரளாவின் கங்கை என்றும் அழைக்கப்படும், இந்த ஆற்றின் முக்கியத்துவம் சபரிமலை கோவிலுடன் தொடர்புடையது.
- பாம்பா திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மூன்று ஆறுகள்-பாம்பா, அச்சன்கோவில் மற்றும் மணிமாலா-வின் சங்கமப் புள்ளியாகும்.
சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
கடம்ப மரம்
- கடம்ப மரம் (Neolamarckia cadamba) இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட சுற்றுச்சூழல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
- ரூபேயேசியே குடும்பத்தைச் சேர்ந்த இது 45 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிக மணம் கொண்ட இதன் பூக்கள் டென்னிஸ் பந்தை போன்ற வடிவில் இருக்கும்.
- பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலை, பூக்கள் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன

