இதர

உணவுப் பொருள்கள் மீது ‘ஓஆர்எஸ்’ வார்த்தையைப் பயன்படுத்த தடை:

  • உணவுப் பொருள்கள் மீது ஓட்டப்படும் வேபிள் மற்றும் விளம்பரங்களில் ஓ.ஆர்எஸ்என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தளை வழங்கியுள்ளது.
    • உணவுப் பொருள்கள் மீது ஒஆர் எஸ் என்ற வார்த்தையை முத்திரை துணைப் பெயர்களாகவோ பயன்படுத்துவது உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு 2006-2 மீறும் செயல்.
    • ‘ஓஆர்எஸ்’ என்ற வார்த்தையை அச்சிட்டுக்கொள்ள அனுமதித்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் இந்த உத்தரவு மூலம் திரும்பப் பெறப்படுவதாகவும் எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம்

    • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) என்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி சட்டப்பூர்வ அமைப்பாகும்.
    • இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் FSSAI இன் நிர்வாக அமைச்சகத்தின் கிழ செயல்படுகிறது.
    • தலைமையகம்: டெல்லி.
    • உணவுப் பொருட்களின் தரங்களை அமைத்தல்,பாதுகாப்பான உணவு நடைமுறைகளை உருவாக்குதல், உணவு வணிகங்களுக்கு உரிமம் வழங்குதல், ஆய்வுகள் மூலம் இணக்கத்தை உறுதி செய்தல்,தரநிலைகளுக்கு ஏற்ப உணவை சோதித்தல், பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்துதல்,குடிமக்கள் தொடர்பு இதன் நோக்கங்களாகும்.
Next Current Affairs இதர >