விண்வெளி
மத்ஸ்யா -6000 சோதனை சமுத்ரயானை வலுப்படுத்துகிறது
- இந்தியாவின் முதல் மனித கடல் பயணமான சமுத்ரயான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
- ISRO மத்ஸ்ய-6000 நீர்மூழ்கிக் கப்பலின் பயணிக்கும் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதித்தது.
-
- மத்ஸ்ய-6000 கோளத்தின் முக்கிய அம்சங்கள்:
- பொருள்: டைட்டானியம்-கலவை
- பணியாளர் திறன்: 3 உறுப்பினர்கள்
- அதிகபட்ச ஆழம்: 6,000 மீட்டர் நீருக்கு அடியில்
- இந்தியாவில் முதல்முறையாக, அதிக ஊடுருவல் எலக்ட்ரான் பீம் வெல்டிங் (EBW) பயன்படுத்தப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்
- இந்தியாவில் 500-க்கும் மேல்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன.
- அவை வறட்சியையும் காலநிலை மாற்றத்தயும் தாங்கி வளரக்கூடியவை.
- இந்த அம்சங்களைக் கவனத்தில் கொள்ளாமல் சமீபத்தில் மரபணு திருத் தப்பட்ட 2 நெல்ரகங்களை (DRR Dhan 100 (Kamala)’ and ‘Pusa DST Rice 1’.) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
- இதன் காரணமாக விவசாயிகள் அதிக விலைகொடுத்து விதை நெல்லை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
- முதல் வகையான டிஆர்ஆர் தான் 100 கமலா, சாம்பா மஹ்சூரியிலிருந்து பெறப்பட்டது, இது 15-20 நாட்கள் முன்னதாகவே பயிர் தயாராகி 25% அதிக உற்பத்தியை அளிக்கிறது.
- இரண்டாவது வகையான பூசா டிஎஸ்டி அரிசி 1, உப்பு மற்றும் காரத்தன்மையை தாங்கக்கூடியது மற்றும் உப்பு நிலைமைகளில் 30% அதிக உற்பத்தியை அளிக்கிறது.

