அறிவியல்

விண்வெளி

ககன்யான் திட்டம் (Gaganyaan Mission)

  • மனிதரை விண்வெளிக்கு அனுப்பி பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரும் இந்தியாவின் முதல் திட்டம்.
  • திட்டமிட்ட இலக்கு – 2027.
  • 400 கி.மீ உயரத்திற்கு விண்கலம் அனுப்பி, 3 நாட்கள் ஆய்வுசெய்யப்படவுள்ளது .
  • இத்திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் 4வது நாடாக இந்தியா மாறும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் , சுபான்ஷு சுக்லா 
  • இவர்களுக்கு ரஷியாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆளில்லா சோதனைகள் (Unmanned Missions)

  • மனிதர்களை அனுப்புவதற்கு முன் 3 ஆளில்லா விண்கல சோதனைகள் நடத்தப்படும்.
  • முதலாவது சோதனையில் வியோமித்ரா (Vyomitra) என்ற மனித உருவ ரோபோ அனுப்பப்படும்.

வியோமித்ராவின்  திறன்கள்:

    • விண்வெளி வீரர்களுக்கு கட்டளைகளை புரிந்து பதிலளிக்க முடியும்.
    • ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளை புரிந்து செயல்படும்.
    • காற்றழுத்தம், வெப்பநிலை, சுற்றுச்சூழல் நிலைகள் போன்றவற்றைக் கண்காணிக்கும்.
    • சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை இயக்கும்.
    • மனிதர் செய்யும் பல செயல்களை செய்யும்.
    • பூமி கட்டளை மையத்துடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கும்.
  • அனைத்து ஆளில்லா சோதனைகள் வெற்றியடைந்தால், 2027-ஆம் ஆண்டு மனித விண்வெளி பயணம் நடைபெறும்.

பாரதிய அந்தரீஷ் ஸ்டேஷன் (இந்திய விண்வெளி நிலையம்)

  • ககன்யான் திட்டம்  வெற்றியடைவதன் பிறகு, பூமியிலிருந்து 400 கிமீ உயரத்தில் “பாரதிய அந்தரீஷ் ஸ்டேஷன்” நிறுவப்படும்.
  • 2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவின் ஆரம்ப விண்வெளி முயற்சிகள்

  • 1963, நவம்பர் 21 – இந்தியா முதல் ஆராய்ச்சி ராக்கெட்டை ஏவியது.
  • 1984, ஏப்ரல் 3 – Rakesh Sharma சோவியத் Soyuz T-11 மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்.

உலக விண்வெளி வரலாறு முக்கிய நிகழ்வுகள்

  • 1926, மார்ச் 16 அமெரிக்க விஞ்ஞானி Robert H. Goddard முதல் திரவ எரிபொருள் 

ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவினார்.

  • 1944, ஜூன் 20 ஜெர்மனியின் V-2 ராக்கெட் 174 கி.மீ உயரம் சென்றது.
  • 1957, அக்டோபர் 4 சோவியத் ஒன்றியம் Sputnik 1 ஏவியது (முதல் செயற்கைக்கோள்).
  • 1957, நவம்பர் 3 Sputnik 2 மூலம் ‘லைக்கா’ நாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
  • 1961, ஏப்ரல் 12 Yuri Gagarin விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர்.
  • 1969, ஜூலை 16 அமெரிக்காவின் Apollo 11 நிலவுக்கு பயணம்.
Next அறிவியல் >