தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-6 (2023-24)
-
- பின்னணி : தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -6 (2023-24) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- 2023-24 ஆம் ஆண்டில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- முன்னணி முகமை (Nodal Agency): மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனம் (IIPS).
- கணக்கெடுப்பு வரம்பு: 715 மாவட்டங்களில் உள்ள சுமார் 6.79 லட்சம் வீடுகளில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- பயன்பாடு: மக்கள் தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப நலக் குறியீடுகள் குறித்த மாவட்ட அளவிலான தரவுகளை இது வழங்குகிறது.
தாய் மற்றும் சேய் நலம்
- மருத்துவமனை பிரசவங்கள்: 88.6 சதவீதத்திலிருந்து 90.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு (ANC): கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு பெறுவது 92.6 சதவீதத்திலிருந்து 95.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- முதல் மூன்று மாத பராமரிப்பு: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலேயே ANC பராமரிப்பு பெறும் தாய்களின் எண்ணிக்கை 70.0 சதவீதத்திலிருந்து 76.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- குறைந்தபட்ச பராமரிப்பு: குறைந்தபட்சம் நான்கு முறை ANC பரிசோதனை செய்துகொண்ட தாய்களின் எண்ணிக்கை 58.5 சதவீதத்திலிருந்து 65.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- திறன்மிகு பிரசவம்: தகுதிவாய்ந்த சுகாதாரப் பணியாளர்கள் முன்னிலையில் நடந்த பிரசவங்கள் 89.4 சதவீதத்திலிருந்து 91.3 சதவீதமாக அதிகரித்துள்ளன.
- பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு: பிரசவம் முடிந்த இரண்டு நாட்களுக்குள் பராமரிப்பு பெறுவது 79.1 சதவீதத்திலிருந்து 85.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு
- மொத்த மகப்பேறு விகிதம் (TFR): இந்தியாவின் மொத்த மகப்பேறு விகிதம் 2.0 என்ற அளவிலேயே ஸ்திரமாக நீடிக்கிறது.
- கருத்தடை பயன்பாட்டு விகிதம் (CPR): இது 66.7 சதவீதத்திலிருந்து 69.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நோய் எதிர்ப்புத் தடுப்பூசி
- முழுமையான தடுப்பூசி செலுத்துதல்: 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளுக்கான முழுமையான தடுப்பூசி கவரேஜ் 83.8 சதவீதத்திலிருந்து 87.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- குறைந்தபட்ச தடுப்பூசி: 96 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையாவது பெற்றுள்ளனர்.
- அரசு மருத்துவமனைகளின் பங்கு: 95.6 சதவீத குழந்தைகளுக்கு அரசு சுகாதார நிலையங்கள் மூலமாகவே பெரும்பாலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
- ரோட்டாவைரஸ் தடுப்பூசி: இதன் கவரேஜ் 36.4 சதவீதத்திலிருந்து 85.4 சதவீதமாக பெருமளவு அதிகரித்துள்ளது.
- தட்டம்மை தடுப்பூசி: தட்டம்மை தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கவரேஜ் 58.6 சதவீதத்திலிருந்து 71.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குழந்தை ஊட்டச்சத்து
- வளர்ச்சிக் குறைபாடு (Stunting): ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் வளர்ச்சிக் குறைபாடு 35.5 சதவீதத்திலிருந்து 29.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- கடுமையான மெலிவுத்தன்மை (Severe wasting): இது 7.7 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- உடல் எடைக் குறைவு (Underweight): இதற்கான விகிதம் 32.1 சதவீதத்திலிருந்து 31.8 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது.
- துணை உணவு: 6 முதல் 8 மாதக் குழந்தைகளுக்குத் துணை உணவு வழங்குவது 45.9 சதவீதத்திலிருந்து 59.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சுகாதாரக் காப்பீடு கவரேஜ்
- காப்பீட்டு வரம்பு: சுகாதாரக் காப்பீடு அல்லது மருத்துவ நிதியுதவித் திட்டங்களின் கீழ் வரும் குடும்பங்களின் எண்ணிக்கை 41.0 சதவீதத்திலிருந்து 60.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு “ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா” (PM-JAY) திட்டம் முக்கியக் காரணியாக இருந்துள்ளது.
பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம்
- இணையப் பயன்பாடு: எப்போதாவது இணையத்தைப் (Internet) பயன்படுத்திய பெண்களின் எண்ணிக்கை 33.3 சதவீதத்திலிருந்து 64.3 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது.
- வங்கி கணக்குகள்: பெண்கள் தாங்களாகவே இயக்கும் சுய வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 78.6 சதவீதத்திலிருந்து 89.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- கைபேசி பயன்பாடு: சொந்தமாக மொபைல் போன் வைத்துப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 53.9 சதவீதத்திலிருந்து 63.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- மாதவிடாய் சுகாதாரம்: 15 முதல் 24 வயதுடைய பெண்களிடையே சுகாதாரமான மாதவிடாய் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது 77.6 சதவீதத்திலிருந்து 79.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

