தெற்காசிய பொருளாதார மேம்பாட்டு அறிக்கை 2026
-
- பின்னணி : உலக வங்கி வெளியிட்ட தெற்காசிய பொருளாதார மேம்பாட்டு அறிக்கை இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதை தெரிவித்துள்ளது.
- முன்னதாக, உலக வங்கி வெளியிட்ட தெற்காசிய பொருளாதார மேம்படுத்துதல் அறிக்கையில், வலுவான உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்த மீள்திறன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2025-ஆம் ஆண்டில் 7.1 சதவீதமாக இருந் தது.
- 2026ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்து அதிகபட்ச நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2027ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக சிறிது குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஜனவரி மாத கணிப்பான 6.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய மதிப்பீடு அதிகமாக உள்ளது.
- இந்திய ஏற்றுமதி உலகளவில் உயர்ந்த வரி அழுத்தங்களை எதிர்கொண்ட போதிலும் வலுவான செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

