அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS)

  • சூழல்:  2017-இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அறிக்கை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) வெளியிடப்படுகிறது.
  • 2025 முதல், இந்த கணக்கெடுப்பு காலவரிசை ‘விவசாய ஆண்டு’ (ஜூலை-ஜூன்) என்பதற்குப் பதிலாக, ‘நாட்காட்டி ஆண்டு’ (ஜனவரி-டிசம்பர்) என மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் அதன் ஆய்வு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

PLFS அறிக்கை

  • இந்த கணக்கெடுப்பு தொழிலாளர் சந்தையின் முக்கிய குறிகாட்டிகளான தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR), தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR) மற்றும் வேலையின்மை விகிதம் (UR) ஆகியவற்றை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இவை பின்வரும் இரண்டு முறைகளில் கணக்கிடப்படுகின்றன

  • வழக்கமான நிலை (Usual Status) ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்படும் முதன்மை மற்றும் துணை செயல்பாடுகளின் அடிப்படையில்.
  • தற்போதைய வாராந்திர நிலை (CWS) கணக்கெடுப்புக்கு முந்தைய கடைசி 7 நாட்களின் அடிப்படையில்.

முக்கிய குறிகாட்டிகள் 

  • LFPR: மொத்த மக்கள் தொகையில் வேலையில் இருப்பவர்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுபவர்களின் விகிதம்.
  • WPR: மொத்த மக்கள் தொகையில் தற்போது பணியில் உள்ளவர்களின் பங்கு.
  • UR: தொழிலாளர் படையில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் சதவீதம்.

செயல்பாட்டு நிலை வரையறைகள்

  • வழக்கமான நிலை (Usual Status): கடந்த 365 நாட்களைக் குறிப்பு காலமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
  • தற்போதைய வாராந்திர நிலை (CWS): கணக்கெடுப்பிற்கு முந்தைய 7 நாட்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்

தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR)

  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான LFPR 59.3% ஆக உள்ளது. இதில் ஆண்களின் பங்கேற்பு 79.1% மற்றும் பெண்களின் பங்கேற்பு 40% ஆகும்.
  • ஆண்கள் தொழிலாளர் படையில் இணையாததற்கு முதன்மைக் காரணம் கல்வியைத் தொடர்வது (69.8%). பெண்களுக்கு, குழந்தை பராமரிப்பு போன்ற வீட்டுப் பொறுப்புகள் (44.4%) முதன்மைக் காரணமாக உள்ளது.

தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR)

  • 15+ வயதுடையவர்களுக்கான ஒட்டுமொத்த WPR 57.4% ஆகும். இது ஆண்களுக்கு 76.6% ஆகவும், பெண்களுக்கு 38.8% ஆகவும் உள்ளது.

வேலையின்மை விகிதம் (UR)

  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 3.1% ஆகும். இது ஊரகப் பகுதிகளில் 2.4% ஆகவும், நகர்ப்புறங்களில் 4.8% ஆகவும் உள்ளது.

சுயதொழில் போக்கு (Self-Employment Trend)

  • சுயதொழில் செய்பவர்களின் விகிதம் 2023-இல் 58.2% ஆக இருந்து, 2025-இல் 56.2% ஆகச் சற்றே குறைந்துள்ளது.

துறை வாரியான வேலைவாய்ப்பு

  • வேலைவாய்ப்பில் விவசாயத் துறை தொடர்ந்து மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் விகிதம் 2024-இல் 44.8% ஆக இருந்து 2025-இல் 43% ஆகக் குறைந்துள்ளது.

 

இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 

  • பின்னணி: இந்தியாவில் கடந்த 33 ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் (எம்எம் ஆர்) 80 சதவீதம் வரை குறைந்து விட்டதாக லான்செட் மகப்பேறியல், மகளிர் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் சுகாதார ஆய்விதழ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மகப்பேறு இறப்பு விகிதம் (MMR)

  • மகப்பேறு இறப்பு என்பது கர்ப்ப காலத்தில், மகப்பேற்றின்போது அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய 42 நாட்களுக்குள் தாய் உயிரிழப்பை குறிக்கும்.
  • மகப்பேறு இறப்பு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழும் 1,00,000 உயிருள்ள பிறப்புகளுக்கு ஏற்படும் தாய்வழி இறப்புகளின் எண்ணிக்கையாகும்.

லான்செட் அறிக்கையின்படி இந்தியாவில் MMR

  • 1990 இல் இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் 508 இலிருந்து 2023 இல் 116 ஆக குறைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் சுமார் 24,700 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.
  • 2021–2023 காலகட்ட மாதிரி பதிவு முறையின்படி மகப்பேறு இறப்பு விகிதம் 88 ஆக உள்ளது.
  • இந்தியாவில் 1990-இல் இருந்து மகப்பேறு இறப்பு விகிதம் 86 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உலக அளவில் இது 48 சத வீதமாக உள்ளதாகவும் அண்மையில் ஐ.நா.வின் மகப்பேறு இறப்பு மதிப்பீட்டுக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

லான்செட் அறிக்கையின்படி உலகளவில் MMR

  • 2023 ஆம் ஆண்டு உலகளவில் சுமார் 2.40 இலட்சம் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்
  • நைஜீரியா 32,900 தாய் இறப்புகளுடன் அதிகபட்சம் பதிவு செய்துள்ளது
  • எத்தியோப்பியா 11,900 மற்றும் பாகிஸ்தான் 10,300 தாய் இறப்புகளை பதிவு செய்துள்ளன
  • உலகளவில் மகப்பேறு இறப்பு விகிதம் 1990 இல் 321 இருந்து 2023 இல் 190.5 ஆக குறைந்துள்ளது
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் 2030க்குள் மகப்பேறு இறப்பு விகிதத்தை 70 ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியா 2030 இலக்கை அடையும் வாய்ப்பு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு MMR

  • அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படும் பாதுகாப்பான பிரசவங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு நாட்டில் முதலிடம் வகிக்கிறது. 
    • இந்த முயற்சிகளின் காரணமாக, தாய் இறப்பு விகிதம் (MMR) ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 35 ஆகவும் குறைந்துள்ளது
  • சிசு இறப்பு விகிதம் (IMR) ஆயிரம் உயிருள்ள பிறப்புகளுக்கு 12 ஆகவும் குறைந்துள்ளது. 
  • இவ்விரண்டுமே தேசிய சராசரியை விட கணிசமாகக் குறைவாகும்.
< Previous Current Affairs Next  அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் >