அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

நிதிநிலை சுகாதாரக் குறியீடு (FHI) 2026

  • பின்னணி: நிதிநிலை சுகாதாரக் குறியீடு (FHI) 2026ன்  2-வது பதிப்பு இந்திய மாநிலங்களின் நிதிச் செயல்பாடு மற்றும் நிதி நிலைத்தன்மையை மதிப்பீடு செய்வதற்காக நிதி ஆயோக் இக்குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடு ஐந்து முக்கியத் தூண்களின் அடிப்படையில் மாநிலங்களை மதிப்பிடுகிறது:
  • செலவினங்களின் தரம் (Quality of Expenditure)
  • வருவாய் திரட்டல் (Revenue Mobilisation)
  • நிதி விவேகம் (Fiscal Prudence)
  • கடன் குறியீடு (Debt Index)
  • கடன் நிலைத்தன்மை (Debt Sustainability)
  • 2014–15 முதல் 2023–24 வரையிலான 10 ஆண்டுகால மாநில நிதிப் போக்குகளை இது ஆய்வு செய்கிறது.
  • 18 முக்கிய மாநிலங்களுடன் சேர்த்து, தற்போது 10 வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களும் இதில் இணைக்கப்பட்டு தனித்தனியாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களின் தரவரிசை (FHI 2026)

  • சாதனையாளர்கள் : ஒடிசா, கோவா, ஜார்கண்ட் 
  • முன்னோடிகள் : குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா.
  • செயல்பாட்டாளர்கள் : மத்தியப் பிரதேசம், ஹரியானா, பீகார், தமிழ்நாடு, ராஜஸ்தான்.
  • ஆர்வமுள்ளவர்கள் : மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப்.

வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள்

  • சாதனையாளர்கள்: அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட்.
  • செயல்பாட்டாளர்கள்: அசாம், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா.
  • ஆர்வமுள்ளவர்கள்: இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து.
< Previous Current Affairs Next  அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் >