அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

UDISE + 2024-25 அறிக்கை

  • 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது மத்திய கல்வி அமைச்சகதின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
  • மாணவர்-ஆசிரியர் விகிதத்தில் முன்னேற்றம்: பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இது ஒவ்வொரு மாணவர் மீதும் கூடுதலாக கவனம் செலுத்துதல், ஆசிரியர்கள்-மாணவர்கள் இடையே கலந்துரையாடலை வலுப்படுத்துல், மேம்பட்ட கற்றல் அனுபவத்துக்குப் பங்களித்தல் கல்வி கற்பித்தலில் நற்பலன்கள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில்

  • தமிழ்நாட்டில் 23 மாணவர்களுக்கு ஓராசிரியர் உள்ளார். ஓராசிரியர் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது.
    • இதேபோல மாணவர் சேர்க்கையே இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையும் சுமார் 38 சதவீதம் குறைந்துள்ளது.
    • 2024-25-ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

     

    பெண்கள் பாதுகாப்பு தேசிய ஆண்டு அறிக்கை மற்றும் குறியீடு (NARI) 2025

    பாதுகாப்பான நகரங்கள்:

    • மும்பை, விசாகப்பட்டணம், கோஹிமா, புவனேஸ்வர், ஐசாவ்ல், கங்டாக் மற்றும் இடானகர்

    பாதுகாப்பற்ற/பாதுகாப்பில்லாத நகரங்கள்:

    • பாட்னா, ஜெய்ப்பூர், ஃபரிதாபாத், டெல்லி, கொல்கத்தா, ஸ்ரீநகர் மற்றும் ராஞ்சி.

    ஒட்டுமொத்த நிலை:

    • ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் 10 பெண்களில் 6 பேர் தங்கள் நகரத்தில் “பாதுகாப்பாக” உணர்ந்தனர், ஆனால் 40% பேர் இன்னும் தங்களை “அதிக பாதுகாப்பில்லாதவர்களாக” அல்லது “பாதுகாப்பற்றவர்களாக ” கருதினர்.

     

    தொழில்துறை ஆண்டு கணக்கெடுப்பு (ASI) 2023-24

    • ஒன்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MOSPI) வெளியிட்ட தொழில்துறை ஆண்டு கணக்கெடுப்பு (ASI) 2023-24 படி, தமிழ்நாடு உற்பத்தித் துறையில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதல் மாநிலமாக உள்ளது.

    கணக்கெடுப்பின் படி:

    • நிலையான மூலதனத்தில் (8.09%), உற்பத்தியில் (10.11%), மற்றும் மொத்த மதிப்பு கூட்டலில் (10.26%) தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
    • நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளில் 15.43% தமிழ்நாட்டில் உள்ளது, அதைத் தொடர்ந்து குஜராத் உள்ளது.
    • நாடு முழுவதிலும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையில் 15.24% தமிழ்நாட்டில் உள்ளது, அதைத் தொடர்ந்து குஜராத் உள்ளது.தமிழ்நாடு இந்தியாவின் திறமை மூலதனம் மற்றும் உற்பத்தி மூலதனமாக தொடர்ந்து விளங்குகிறது.
Next Current Affairs அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் >