துணை குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் தகுதிகள்:
- துணை குடியரசுத் தலைவர் , பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களை கொண்ட தேர்தல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- இந்த தேர்தல் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறையின் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி நடைபெறுகிறது. இத்தேர்தலில் வாக்களிப்பு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெறுகிறது.
தகுதிகள்:
- ஒருவர் துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனில் அவர்:
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
- 35 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்
- மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
தகுதியின்மை:
- இந்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் கீழ்செயல்படும் உள்ளூராட்சி அமைப்புகளின் கீழ் எந்தவொரு இலாப பதவியையும் வகிக்கும் நபர் தகுதியற்றவராக கருதப்படுவார்.

