விளையாட்டுகள்

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025
இந்தப் புதிய கொள்கை, தற்போதுள்ள தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-க்கு மாற்றாகவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்குவதற்கான வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை இது
அடிப்படையாகக் கொண்டுள்ளது.

முக்கிய தூண்கள்
உலக அரங்கில் சிறப்பாக செயல்படுத்தல்
பொருளாதார வளர்ச்சிக்காக விளையாட்டு
✓ சமூக வளர்ச்சிக்கான விளையாட்டு

மக்கள் இயக்கமாக விளையாட்டு

கல்வியுடன் ஒருங்கிணைப்பு (NEP 2020)

டிஜிட்டல் இந்தியா திட்டம்: 10 ஆண்டுகள் நிறைவு

புதுடெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இத்திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் 5ஜி திட்டம் உலகில் வேகமான திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் 2 ஆண்டு களில் 4.81 லட்சம் அடிப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் கீழ் இருக்கும் தளங்களான ஆதார், கோ-வின், டிஜி- லாக்கர், பாஸ்ட்-டேக், பிஎம். வாணி, ஒன் நேஷன் ஒன் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை இப்போது உலகளவில் ஆய்வு செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் இந்தியா ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது, மேலும் தற்சார்பு இந்தியாவை உருவாக் குவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகின் நம்பகமான கூட்டாளியாக மாற்று வதற்குமான மையமாக விளங்குகிறது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (eNAM) மூலம் விவசாயத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் புரட் சியை ஏற்படுத்தியுள்ளது.

இது நாடு முழுவதும் நுகர்வோர், விவசாயிகள் நேரடியாக இணைய உதவுகிறது. 1,400-க்கும் மேற் பட்ட மண்டிகளில் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் மற்றும் 1.7 கோடி விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக் கப்பட்டதன் மூலம், இதன் தாக்கம் நிதர்சனமானது

வெற்றி நிச்சயம் திட்டம்

படித்த, வேலையில்லாத இளைஞர்கள், படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களை கண்டறிந்து ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் குறுகிய கால திறன் பயிற்சி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய வகுப்பினர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டும் .

தேர்ந்த்தேடுக்கபடுபவர்களுக்கு ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலைதூர மாணவர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் வழங்கப்படும்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 75 ஆயிரம் மாணவர் களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69 சதவீத வளர்ச்சி வீதத்தில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

நான் முதல்வன் திட்டத்தால் இதுவரை 41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வளர்ந்து வரும் நவீன தொழில்துறைக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப திறன், தகவல் தொழில்நுட்பம், மொழி அறிவு, ஹேக்கத்தான்ஸ், இண்டர்ன்ஷிப் ஆகியவற்றை உள்ளடக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தால் 3.28 லட்சம் மாணவர்கள், முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

Next Current Affairs விளையாட்டு >