பாதுகாப்பு
ஆசியான் இந்தியா கடல்சார் பயிற்சி (AIME-2023)
- AIME-2023 பயிற்சி மே 2 முதல் 8 வரை இரண்டு கட்டங்களாக நடத்தபட்டது.
- INS சத்புரா மற்றும் INS டெல்லி ஆகிய இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்களும் பயிற்சியில் பங்கேற்றன.
- கடற்படை பயிற்சியின் துறைமுக கட்டம் மே 2 முதல் 4 வரை சாங்கி கடற்படை தளத்தில் நடைபெற்றது. தென் சீனக் கடலில் மே 7 முதல் 8 வரை கடல் கட்டமும் நடத்தப்பட்டது.
- இந்தப் பயிற்சியானது இந்திய கடற்படை மற்றும் ஆசியான் கடற்படைகள் நெருக்கமாக பணிபுரியவும், கடல்வழியில் தடையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.
- இதில் பங்கேற்கும் கப்பல்கள், சிங்கப்பூர் துறைமுகத்தில் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX-23) மற்றும் சிங்கப்பூரில் நடத்தப்படும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும்.
- ஐஎன்எஸ் டெல்லி, இந்தியாவின் முதல் உள்நாட்டில் கட்டப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் ஆகும்.
- ஐஎன்எஸ் சத்புரா, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலாகும்.
- விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை அலகில் இந்த இரு கப்பல்களும் உள்ளன.
ASEAN பற்றி
ASEAN – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்.
- 1967 இல் பாங்காக்கில் (தாய்லாந்து) நிறுவப்பட்டது.
- பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது.
- ASEAN நாடுகள் – புருனே, கம்போடியா, இந்ததோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்.
விளையாட்டு
ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில் தங்கம்
- இந்தியாவின் முன்னணி ஆண்கள் இரட்டையர் ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி மலேசிய ஜோடியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யியை வீழ்த்தி தங்கம் வென்றனர்.
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துபாயில் நடந்தது.
விருதுகள் & கௌரவங்கள்
- கலை விமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இந்திரன் (பி.ஜி.ராஜேந்திரன்) வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதைப் பெற்றார்.
- நீலம் கலாச்சார மையத்தின் (NCC) ஒரு பகுதியாக இவ்விருது நிறுவப்பட்டது.
- அவரது மிக முக்கியமான படைப்பு, ”அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” (1982) (31 ஆப்பிரிக்க நாடுகளின் கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகளின் புத்தகம்).
- அவரது அறிமுக இந்திய இலக்கியம் 1986 இல், ”காற்றுக்கு திசை இல்லை” ஆகும்.
- 1994 இல், அவர் ”பசித்த தலைமுறை” என்ற மூன்றாம் உலக நாடுகளின் கவிதைப் படைப்பை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
ஆஸ்திரேலியாவின் உயரிய சிவிலியன் கவுரவம்
- ஆஸ்திரேலியாவின் உயரிய சிவிலியன் கௌரவமான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவர் ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது.
- இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதலில் அவரது முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.