முக்கிய இடங்கள்
உலகின் மிக உயரமான ரயில் பாலம்
- உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தில் , ஜனவரி 2024க்குள் ரயில்கள் இயக்கப்படும்.
- வளைவுப் பாலத்தில் டிராக் பொருத்தப்பட்ட தொடர்வண்டியின் முதல் ஓட்டம் மார்ச் 21 அன்று நடத்தப்பட்டது.
- இந்த பாலம் 359 மீ உயரத்தில் உள்ளது, இது பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட(330 மீ) உயரமானது,
- செனாப் பாலம் நில அதிர்வு அதிகம் உள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ளது .
- பாலத்தின் அடித்தளம் ரிக்டர் அளவுகோலில் 8 வரை நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
- வளைவுப் பாலம் அமைக்க 28,000 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- புதுதில்லியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் தங்கம் வென்றார் நிகத் ஜரீன்.
- இறுதிப் போட்டியில் வியட்நாமின் தி தாம் நியுஜெனை நிகாத் தோற்கடித்தார்.
- மேரி கோமுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் பல தங்கப் பதக்கங்களை வென்ற 2வது இந்தியப் பெண் நிகத் ஆவார்.
- தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் நிகத் ஜரீன்.
- தற்போது நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
- இதற்கு முன் நிது கங்காஸ் (48 கிலோ) மற்றும் சவீதி பூரா (81 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
- புதுதில்லியில் நடைபெற்ற IPA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லினா போரோகைன் இந்தியாவின் நான்காவது தங்கத்தை வென்றார் .
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 70-75 கிலோ இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்றார் , அங்கு அவர் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் அன்னே பார்க்கரை தோற்கடித்தார்.
- 2018 மற்றும் 2019 பதிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு,லவ்லினா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.
- லவ்லினா போரோகைன் அசாம் மாநிலம் கோலாகாட்டை சேர்ந்தவர் .