வரலாறு

ஏர் இந்தியா AI171 விபத்து: பிளாக் பாக்ஸ் என்றால் என்ன, அது ஏன் முக்கியம்?

  • பிளாக் பாக்ஸ் என்பது விமானம் பறக்கும் போது அதன் தகவல்களை பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும்.
  • இந்த பிரகாசமான ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற செவ்வக பெட்டி வெடிப்பு, தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரன் கண்டுபிடித்த இது, விமான விபத்தின் காரணத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
  • பதிவு கருவிகள் பொதுவாக எஃகு அல்லது டைட்டானியம் போன்ற வலுவான பொருட்களால் செய்யப்பட்ட அலகுகளில் சேமிக்கப்படுகின்றன மற்றும் கடுமையான வெப்பம், குளிர் அல்லது ஈரப்பதம் போன்ற காரணிகளிலிருந்து காக்கபடுகின்றன .

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

சக்தி இராணுவப் பயிற்சி

  • சக்தி இராணுவப் பயிற்சி 2025 பிரான்சின் லா காவலேரியில் ஜூன் 18 முதல் நடைபெறும்.
  • இது இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
  • இது இந்தியா மற்றும் பிரான்சில் சுழற்ச்சி முறையில்  நடைபெறும் இருவருட நிகழ்வாகும்.
  • இது சக்தி இராணுவப் பயிற்சியின் 8வது பதிப்பாகும் மற்றும் கடந்த முறை இது இந்தியாவில் நடைபெற்றது.
  • துணை வழக்கமான சூழ்நிலையில் பல களப் பணிகளை மேற்கொள்வதற்கான இருதரப்பு கூட்டு இராணுவ திறனை மேம்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
  • பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான பிற கூட்டு பயிற்சிகள் பாலைவன நைட் பயிற்சி, வருண பயிற்சி மற்றும் கருட பயிற்சி ஆகும்.
Next Current Affairs வரலாறு >