பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு
- ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
- ஆந்திர மாநிலம் கர்னூலில் லேசர் வழிகாட்டுதலில் செயல் படும் 30 கிலோவாட் திறன் கொண்ட எம்கே-2 ஏ)எரிசக்தி ஆயுத அமைப்பை டி.ஆர்டிஓ பரிசோதனை செய்தது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுத அமைப்பு, தொலைதூரத்தில் இருந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது.
- அத்துடன் பல ட்ரோன் தாக்குதல்களையும் அந்த ஆயுத அமைப்பு தடுத்து, கண்காணிப்பு சென்சார்களையும் அழித்தது.
மகாசாகர்
- இந்திய, 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து 6 நாள்கள் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப் பயிற்சி தான்சானியாவில் தொடங்கியது.
- அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம் (மகாசாகர்) என்பது பிரதமரின் புதிய தொலை நோக்குப் பார்வையாகும்.
- முதல் முறையாக இந்தியா மற்றும் 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து தான்சானியாவின் தார்-எஸ்-சலாம் கடற்பகுதியில் கடற்படை கூட்டுப் பயிற்சியை தொடங்கின.
- 6 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியை இந்திய கடற்படையும், தான்சானியா பாதுகாப்புப் படையும் இணைந்து நடத்துகின்றன.