பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
2020-24 காலகட்டத்தில் உக்ரைனுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளர்
- இத்தரவுகளை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டது
- 2015-19 காலத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 9.3% குறைவானாபோதிலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
- ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய விநியோகிப்பாளராக உள்ளது, ஆனால் அதன் பங்கு 2015-19இல் இருந்த 55% மற்றும் 2010-14இல் இருந்த 72% என்பதிலிருந்து 36% ஆகக் குறைந்துள்ளது. ·
- இந்தியா பிரான்சின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக (28%) மாறியுள்ளது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பங்கைவிட (15%) கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும் .
கன்ஜார்-XII இராணுவப் பயிற்சி
- இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டுச் சிறப்புப் படைப் பயிற்சியாகும்
- இது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சிறப்புப் படைப் பயிற்சியில் கவனம் செலுத்தும் இருதரப்பு இராணுவப் பயிற்சி ஆகும்.
- தேதி & இடம்: மார்ச் 10-23, 2025, கிர்கிஸ்தான்
- பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப் படைகள்) வீரர்கள்இந்திய அணியையும் கிர்கிஸ் ஸ்கார்பியன் பிரிகேட் கிர்கிஸ்தான் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்
முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள்
ஜலநாதேஸ்வரர் கோவில்
- தமிழ்நாட்டின் தக்கோலத்தில் உள்ள ஜலநாதேஸ்வரர் கோவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இது 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவ கால கட்டமைப்பாகும்
- ஜலநாதேஸ்வரர் கோவில் பற்றி – கோஸஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மூல கோவில் வளாகம் பல்லவர்களால் (6ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டு, பின்னர் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டது.
- தக்கோலம் போர் (949 CE) முக்கியமானது, இதில் சோழ இளவரசர் ராஜாதித்யர் ராஷ்டிரகூடர்களால் கொல்லப்பட்டார்.
-
- அவரை கௌரவிக்க, CISF தனது அரக்கோணத்தில் உள்ள RTC-ஐ மார்ச் 2025இல் ராஜாதித்ய சோழ RTC என மறுபெயரிட்டது.
- தக்கோலத்தின் கல்வெட்டுகள் சோழ வம்சத்தின் காலத்தைக் கணிப்பதில் முக்கிய பங்கு வகித்தன, வரலாற்றாசிரியர்கள் ஆதித்த Iன் ஆட்சிக்காலம் (870-907 CE) மற்றும் விஜயாலய சோழனின் அரியணை ஏற்பு 850 CEக்கு முன்னர் என்பதை தீர்மானிக்க உதவின.
நியமனங்கள்
உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம்
- மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னா தலைமையிலான 5 உறுப்பினர்களைக் கொண்ட கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.
- இவரது நியமனத்துடன் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யும் 33-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி களின் பணியிடங்கள் 34.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு
- சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய ஆர். சக்திவேல், பி. தனபால் ஆகிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டனர். .
- உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு செய்த பரிந்துரையை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்