சர்வதேச MSME தினம்
-
- சர்வதேச MSME தினம் ஆண்டுதோறும் ஜூன் 27 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
- 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச MSME தினத்தின் கருப்பொருள்: Empowering MSMEs through Innovation and Sustainable Industrial Development.
சர்வதேச காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர் தினம்
- சர்வதேச காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர் தினம் ஜூன் 27 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
- 2026 ஆம் ஆண்டின் கருப்பொருள் “Connected by Touch: Breaking Barriers, Building Bridges” என்பதாகும்.
நடப்பு தகவல்கள்
- TANSTIA – தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறிய தொழில்கள் சங்கம்
- TANSIDCO – தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்
- SIDCO – சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம்
- கடவுச்சீட்டு என்பது முதன்மையாக ஒரு “பயண ஆவணம்” மட்டுமே என்றும், அது குடியுரிமைக்கான அறுதியான சான்று அல்ல என்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
- சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தேசிய சூப்பர்கம்ப்யூட்டிங் மையத்தில் நிறுவப்பட்டுள்ள லைன்ஷைன் என்ற சூப்பர்கம்ப்யூட்டர், உலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டராக முடிசூட்டப்பட்டுள்ளது.
OPEC (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு)
- OPEC என்பது முக்கிய பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் நிரந்தரமான அரசுகளுக்கிடையிலான ஒரு அமைப்பாகும்; இது உலகளாவிய எண்ணெய் சந்தைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளை நிலைப்படுத்துவதற்காகப் பெட்ரோலியக் கொள்கைகளை ஒருங்கிணைக்கிறது.
- பாக்தாத் மாநாடு (1960): ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளால் 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-அன்று நிறுவப்பட்டது.
- தலைமையகம்: 1965-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கு மாற்றப்பட்டது.
திருக்குறள் (எண் 875) அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
விளக்கம் :தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.

