சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள்
- ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முட்டையிடும் பருவம் தொடங்கிவிட்டது. இந்த ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ்நாடு கடற்கரையில் முட்டையிடுகின்றன.
ஆலிவ் ரிட்லி
- ஆலிவ் ரிட்லி கடல் ஆமையானது IUCN சிவப்பு பட்டியலில் ‘அழிவாய்ப்பு நிலையில் உள்ள’ இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை-I மற்றும் CITES பின் இணைப்பு-I இல் சேர்க்கப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட இனமாகும்.

