ராணுவத் தலைமைத் தளபதி (COAS)
- நாட்டிற்கு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகச் சிறப்பான சேவையாற்றி ஓய்வுபெற்ற ஜெனரல் உபேந்திர திவேதிக்குப் பிறகு, ஜெனரல் தீரஜ் சேத் 31-வது ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
நடப்பு தகவல்கள்
புவியரசு: சாகித்ய அகாடமி விருதுகள்
- காஜி நஸ்ருல் இஸ்லாமின் ‘தி ரெவல்யூஷனரி’ என்ற படைப்பின் மொழிபெயர்ப்பான ‘புரட்சிக்காரன்‘ என்ற கவிதை நூலுக்காக, 2007-இல் அவர் சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்புப் பரிசை வென்றார்.
- 2010-இல், ‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காகத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது அவருக்கு வழங்கப்பட்டது.
திருக்குறள் (எண் 879) அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்
இளைதுஆக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
- விளக்கம் : முன்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.

