மன் கீ பாத்
- சூழல்: ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றி வருகிறார்.
- அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ஒலிபரப்பான 135-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை வருமாறு:
- பிரதமரின் விபத்துக் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் சாதனைகளை எடுத்து உறைத்தார்.
பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம்
- பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது, ஒரு வருட விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத்திற்க்கு காப்பீடு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம்.
- 18 முதல் 70 வயது வரையில் உள்ள, தனி நபர் வங்கி கணக்கு அல்லது அஞ்சலக கணக்கு வைத்திருப்போர், இத்திட்டத்தில் சேர தகுதி உடையோர்.
- ஆண்டுதோறும் ரூ. 20 ஐ காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால், விபத்தால் இறப்போர் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ. 2 லட்சம் (சிறிதளவு ஊனத்திற்கு ரூபாய் 1 லட்சம்) வழங்கப்படும்.
சாதனைகள்
-
- இது வரை இந்தத் திட்டத்தில் 58 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
- இவர்களில் 28 கோடிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர்.
- இந்தத் திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3.700 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம்
- பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.
- இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. எந்த காரணத்திற்காக மரணம் நிகழ்ந்தாலும் இறப்பிற்கு பின் இழப்பீடு வழங்குகிறது.
- 18-50 வயதுக்குட்பட்ட தனிநபர் வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய முடியும்.
- 50 வயதைத் தொடும் முன் திட்டத்தில் சேரும் நபர்கள், வழக்கமான பிரீமியத்தைச் செலுத்தினால், 55 வயது வரையிலான ஆயுள் காப்பீட்டைத் தொடரலாம்.
- ஆண்டுக்கு ரூ 436/- பிரீமியம் செலுத்துவோருக்கு, ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காப்பீடாக ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சாதனைகள்
- இந்தத் திட்டத் தில் இதுவரை 27 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
- இதுவரை சுமார் 11 லட்சம் குடும்பங்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடி காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது.
ஊரக உள் தணிக்கை இணையதளம்
- சூழல்: ஜூலை 1 முதல் வேலைவாய்ப்பு மற்றும் ஆஜீவிகா திட்டத்திற்கான (கிராமின்) விக்சித் பாரத் உத்தரவாதம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் “ஊரக உள் தணிக்கை இணையதளத்தை” தொடங்கி வைத்தார்.
ஊரக உள் தணிக்கை இணையதளத்தின் முக்கிய அம்சங்கள்
- முழுமையான டிஜிட்டல் தணிக்கை மேலாண்மை
- எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கைகள் மற்றும் துணைத் தீர்வு
- மையப்படுத்தப்பட்ட தணிக்கைக் களஞ்சியம்
- பன்மொழி மற்றும் பயனர் நட்பு இடைமுகம்
- செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு
ஊரக உள் தணிக்கை இணையதளத்தின் நோக்கங்கள்
- உள் தணிக்கை செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குதல்.
- தணிக்கை நடைமுறைகளை எளிமையாக்குதல்.
- செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துதல்.
- ஒரு மையப்படுத்தப்பட்ட தணிக்கைக் களஞ்சியத்தை உருவாக்குதல்.
- இடர் அடிப்படையிலான தணிக்கைத் திட்டமிடலைச் செயல்படுத்துதல்.
- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைப்பு ரீதியான பலவீனங்களைக் கண்டறிதல்.
நன்மைகள்
- கையேடு, காகித அடிப்படையிலான தணிக்கை செயல்முறைகளுக்கு மாற்றாக அமைகிறது.
- தணிக்கைகளை வேகமாகவும், வெளிப்படையாகவும், திறமையாகவும் ஆக்குகிறது.
- சிறந்த கண்காணிப்பு மற்றும் முடிவெடுப்பதற்கு உதவுகிறது.
முழியன் குளம்
- சூழல்: 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முழியன் குளம்’ புதுப்பிக்கப்பட்டு, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
முழியன் குளம் பற்றிய தகவல்கள்
-
- அமைவிடம்: புதுச்சேரி, பூரணன்குப்பம் பகுதியில் உள்ள தவளக்குப்பம் அருகே அமைந்துள்ள இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலை.
- வரலாற்றுப் பின்னணி: பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.
முக்கியத்துவம்
- உள்ளூர் மக்களுக்குக் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான முக்கிய ஆதாரமாகப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- நிலத்தடி நீரூற்றுகளால் நிரம்பும் நான்கு இயற்கையான கிணறுகளைக் கொண்டுள்ளது.
- புதுப்பிப்பு முறை: மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலை மையமாகக் கொண்ட தென்னிந்தியாவின் பழமையான நீர் மேலாண்மை நுட்பமான ‘நான்கு மொழி’ முறையின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- அமைப்பு: மையக் குளம் ஒன்று, நிலத்தடி வாய்க்கால்கள் மூலம் நான்கு தனித்தனி கிணறுகளுடன் (மொழிகள்) இணைக்கப்பட்டு, ஒரு ஒருங்கிணைந்த நீர் அமைப்பை உருவாக்குகிறது.
பிரதமரின் குடும்ப நலக் கண்காணிப்பு அமைப்பு (PM-FCT)
- சூழல்: மத்திய உள்துறை அமைச்சர் பிரதமரின் குடும்ப நலக் கண்காணிப்பு அமைப்பு (PM-FCT) திட்டத்தின் முன்னோடி முயற்சியை இங்கு தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான மத்திய அரசின் நலத்திட்டங்களின் கீழ் எந்தவொரு பயனாளியும் விடுபடாமல் இருப்பதை இந்த ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
- தொடர் கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம், கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்குரிய அனைத்து அரசு சலுகைகளையும் பெறுவதை இந்த டிஜிட்டல் தளம் உறுதி செய்யும்.
முக்கிய அம்சங்கள்
-
- காந்திநகர் மக்களவைத் தொகுதிக்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம்.
- ICDS, RCH, போஷன் அபியான் மற்றும் பள்ளி சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றின் தரவுகளை இது ஒருங்கிணைக்கிறது.
- பதிவுகளை இணைப்பதற்கு ‘பிறப்புப் பதிவு எண்’ தனித்துவமான அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படுகிறது.
- TeCHO+, போஷன் டிராக்கர் மற்றும் குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் தரவுத்தளங்களை இது ஒருங்கிணைக்கிறது.
- கர்ப்பகாலம் முதல் 18 வயது வரை குழந்தைகளின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி நிலையை இது கண்காணிக்கிறது.
- சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த 16 நலத்திட்டங்களை இது உள்ளடக்கியுள்ளது.
செயல்முறை
- குழந்தை தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தவறினால் எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
- பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளை அடையாளம் கண்டு, அதிகாரிகள் மூலம் தொடர் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது.
- குறைந்த எடை, வளர்ச்சி குன்றிய நிலை அல்லது சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு ஆரம்பக்கட்ட உதவிகளை வழங்குகிறது.
- கர்ப்பகாலம் முதல் தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை தாய்மார்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கிறது.
உள்ளடக்கப்பட்ட திட்டங்கள்
- பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா
- ஜனனி சுரக்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம்
- பிஎம் போஷன்
- மிஷன் வத்சல்யா
- ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா
கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கைகள்
- தாய்மார்களின் ஆரோக்கியம், குழந்தைகளின் தடுப்பூசி, ஊட்டச்சத்துக் குறைபாடு, பள்ளியில் சேருதல், இடைநிற்றல் மற்றும் வளரிளம் பருவப் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றை இது கண்காணிக்கிறது.
- நடவடிக்கை முழுமையாக முடியும் வரை தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க தானியங்கி எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்துகிறது.
ஜிஎஸ்டி – 10 ஆண்டுகள்: செயல்திறனை மேம்படுத்த AI பயன்பாடு
- சூழல்: 2026 ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவை வரிஅறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
- இதையொட்டி, மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு ஒருங்கிணைப்பு மூலம் GST நிர்வாகத்தை மேலும் திறன் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
GST அறிமுகம்
- 2017 ஜூலை 1 நள்ளிரவில் பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜிஎஸ்டி -யை தொடங்கி வைத்தார்.
- அப்போதைய பிரதமர், இந்த வரி முறை வர்த்தகர்கள் மற்றும் சிறு வணிகர்கள் எதிர்கொண்ட பல்வேறு மறைமுக வரிச் சிக்கல்களை குறைக்கும் எனக் குறிப்பிட்டார்.
- முன்னாள் நிதியமைச்சர் மாநிலங்களின் ஒத்துழைப்பைப் பெற்று GST அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
வரி விகிதங்களில் மாற்றம்
- ஆரம்பத்தில் 5%, 12%, 18%, 28% என நான்கு வரி விகிதங்கள் இருந்தன.
- பின்னர், 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய விகிதங்களாக எளிமைப்படுத்தப்பட்டது.
- ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
GST வளர்ச்சி (2017–2025)
- 2017–18-இல் மாதாந்திர சராசரி GST வசூல்: ₹89,700 கோடி.
- 2025–26-இல் அது ₹1.85 லட்சம் கோடியாக உயர்ந்தது.
- பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர்:
- 2017: 66.5 லட்சம்
- 2025: சுமார் 1.6 கோடி
GST செயல்திறனை மேம்படுத்தும் புதிய நடவடிக்கைகள்
- செயற்கை நுண்ணறிவு (AI) மூலம்:
- வரி ஏய்ப்புகளை கண்டறிதல்.
- அபாய மதிப்பீட்டை மேம்படுத்துதல்.
- GST, வருமான வரி மற்றும் சுங்கத் துறை தரவுகளை ஒருங்கிணைத்து தகவல் பகிர்வை வலுப்படுத்துதல்.
- திருப்பியளிக்கும் (ரீஃபண்ட்) வழங்கும் செயல்முறையை வேகப்படுத்துதல்.
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரி விதிமுறைகளை எளிதாக பின்பற்ற தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்துதல்.
முக்கியத்துவம்
- வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்.
- வரி ஏய்ப்பு மற்றும் போலி பில் மோசடிகளை கட்டுப்படுத்த உதவும்.
- வணிகங்களுக்கு எளிய இணக்க நடைமுறைகள் கிடைக்கும்.
- அரசின் வருவாய் அதிகரிப்பதுடன், டிஜிட்டல் வரி நிர்வாகம் மேலும் வலுப்பெறும்.
பாக்ஸ் சிலிக்கா உச்சிமாநாடு
- சூழல்: பாக்ஸ் சிலிக்கா -இன் இரண்டாவது உச்சிமாநாடு வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.
- இதில், இந்தியா உட்பட 35 நாடுகள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களுக்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் அமெரிக்கா தலைமையிலான முயற்சியில் இணைந்து கையெழுத்திட்டன.
பாக்ஸ் சிலிக்கா பற்றி
- பாக்ஸ் சிலிக்கா என்பது அமெரிக்கா 2025 டிசம்பரில் அறிமுகப்படுத்திய பன்னாட்டு தொழில்நுட்ப கூட்டாண்மை முயற்சி.
- இதன் நோக்கம்:
- குறைக்கடத்திகள்
- செயற்கை நுண்ணறிவு
- அரிய புவித் தனிமங்கள் ஆகியவற்றின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பாகவும் வலுவாகவும் உருவாக்குவது.
‘பாக்ஸ் சிலிக்கா என்ற பெயரின் பொருள்
- “Pax” – அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கிறது.
- “Silica” – குறைக்கடத்தி உற்பத்தியில் பயன்படும் சிலிக்கான் மூலப்பொருளைக் குறிக்கிறது.
- இப்பெயர் பாதுகாப்பான, நிலையான மற்றும் கூட்டுறவு அடிப்படையிலான உலக தொழில்நுட்ப அமைப்பை குறிக்கிறது.
பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தின் முக்கிய நோக்கங்கள்
- முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு ஒரே ஒரு நாட்டை அதிகமாக சார்ந்திருப்பதை குறைத்தல்.
- குறைக்கடத்திகள், AI மற்றும் பிற முக்கிய தொழில்நுட்பங்களுக்கான பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல்.
- கூட்டாளர் நாடுகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
முக்கியத்துவம்
- அத்தியாவசிய தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய கனிமங்களுக்கு ஒரே நாட்டை அதிகமாக சார்ந்திருப்பதால் ஏற்படும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களை குறைக்க உதவுகிறது.
- விநியோக ஆதாரங்களைப் பன்முகப்படுத்தி, தொழில்நுட்பத் துறையில் மீள்திறன் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
- உலகளாவிய AI மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கான பாதுகாப்பான வழங்கல் அமைப்பை உருவாக்குவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

