சஹ்யோக் தகவல்தளம்
- சஹ்யோக் என்பது இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கீழ் உள்துறை அமைச்சகத்தால் (MHA) உருவாக்கப்பட்ட மைய தளமாகும்.
- இது சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு (LEAs) தரவு அணுகலை எளிமைப்படுத்தவும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ் சட்டவிரோதமான இணைய தகவல்களை அகற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவல்தளம் தரவு கோரிக்கைகளைக் கையாளுவதற்கும், சட்டவிரோதமான தகவல்களை அகற்றுவதற்கும், சைபர் குற்ற விசாரணைகளுக்கான மறுமொழி நேரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பை வழங்குவதன் மூலம் அரசாங்கம் மற்றும் IT நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முயல்கிறது.
முதியோர் ஆணையத்தை நிறுவிய முதல் மாநிலமாக கேரளா மாறியது
- கேரளா மாநில முதியோர் ஆணைய மசோதா, 2025ஐ நிறைவேற்றி முதியோர் ஆணையத்தை நிறுவிய இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
முதியோர் ஆணையம் பற்றி
- இவ்வாணையம் கேரளா மாநில முதியோர் ஆணைய சட்டம், 2025ன் கீழ் நிறுவப்பட்டது
- இந்தியாவில் முதல் முறையாக, முதியோர் நலனுக்காக மட்டுமே செயல்படும் அமைப்பாகும் .
- இவ்வமைப்பு முதியோர் தொடர்பான மாநில கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக செயல்படுகிறது.
ஆணையத்தின் நோக்கம்
- முதியோரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பது.
- முதியோரின் மறுவாழ்வு, பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் செயல்பாட்டிற்கான பங்களிப்பை உறுதி செய்தல்.
- கேரளாவில் முதியோருக்கான உள்ளடக்கத்தையும் கண்ணியத்தையும் ஊக்குவித்தல்.
தேசிய – நிகழ்வுகளின் நாட்குறிப்பு
யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம்
- இடம்: வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், புது டெல்லி
- திட்ட முன்முயற்சி: மத்திய விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்
- நோக்கம்: இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை காட்சிப்படுத்துதல், இந்தியாவின் காலத்தால் அழியாத அடையாளத்தை—கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை கொண்டாடுதல்
- இந்திய தேசிய அருங்காட்சியகத்திற்கும் பிரான்ஸ் அருங்காட்சியகங்கள் மேம்பாட்டிற்கும் இடையே அருங்காட்சியகத்தின் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.