தினசரி தேசிய நிகழ்வுகள்

ரைசினா உரையாடல்

  • இது இந்தியாவின் முன்னணி புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான மாநாடாகும், உலகின் மிகவும் அவசரமான சவால்களை அணுகுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டது
  • ஆண்டுதோறும் புது டெல்லியில் நடத்தப்படுகிறது
  • ரைசினா உரையாடலின் 10வது பதிப்பு மார்ச் 17 முதல் மார்ச் 19, 2025 வரை நடைபெற உள்ளது.
  • 2025 ஆண்டுக்கான க்கான மைய கருப்பொருள் “காலச்சக்ரா – மக்கள், அமைதி மற்றும் கிரகம்.”
  • சுமார் 125 நாடுகளில் இருந்து 3,500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த உரையாடலில் நேரடியாக கலந்து கொள்வார்கள், இது இந்தியாவின் மிகப்பெரிய இராஜதந்திர கூட்டங்களில் ஒன்றாகும்

 

ஃபிட் இந்தியா கார்னிவல்

  • இது தனித்துவமான மூன்று நாள் உடற்பயிற்சி மற்றும் நலவாழ்வு நிகழ்வாகும்
  • இதை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்வு குடிமக்களிடையே உடல் ஆரோக்கியம், மனநல மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பிரதமர் தொழில்  பயிற்சி திட்ட செயலி

  • மத்திய அரசு, இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்கான “பிரதமர் தொழில் பயிற்சி திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ், 2024-25ஆம் ஆண்டு காலக்கட்டத்தில்27 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான இலக்கு வைத்துள்ளது. முதல் கட்டமாக 1.27 லட்சம் வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டது.
  • இரண்டாம் கட்ட பயிற்சி திட்டம் கீழ், 327 நிறுவனங்கள் சார்பில்18 லட்சம் பயிற்சி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு, 12 மாதத்திற்கு மாதம் ரூ. 5,000 உதவித் தொகையும், ஒரு முறை ரூ. 6,000 மானியமாக வழங்கப்படும்.

 

புதிய உச்சநீதிமன்ற நீதிபதி பதவியேற்பு

  • கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்த பதவிப் பிரமாணம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செய்து வைத்தார்
  • இவர் பதவியேற்பு மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
  • உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 .
  • இவர் 2031-ஆம் ஆண்டு வரை, அதாவது 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பார்
  • கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில், இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு நியமித்தது

 

2024 ஆம் ஆண்டின் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியல்

  • ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐக்யூஏஐஆர் நிறுவனம் காற்றின் தரக் குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 138 நாடுகளின் 8954 நகரங்களில் இருந்து காற்றின் தர தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, காற்றில் பிஎம் 5 அளவு 0-5 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் வரை இருக்க வேண்டும்.

முக்கியமான பட்டியலின் இடங்கள்:

  • சாட் – இந்த நாட்டில் பிஎம் 5 அளவு பரிந்துரைக்கப்பட்டதை விட 18 மடங்கு அதிகமாக (91.8) பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
  • வங்கதேசம் (78)
  • பாகிஸ்தான் (73.7)
  • காங்கோ (58.2)
  • இந்தியா (50.6) – 5-வது  இடம்
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >