தினசரி தேசிய நிகழ்வுகள்

1.நேபாள ராணுவ தலைமை தளபதி அசோக்ராஜ் சிக் டெலுக்கு “இந்திய ராணுவ ஜெனரல்” கௌரவ பதவியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
2.1950-களில் இருந்து இந்தியா மற்றும் நேபாள ராணுவ தலைமை தளபதியாக பதவி வகிப்பவர்களுக்கு இருநாடுகளும் ஜெனரல் பதவி வழங்கி கௌரவிக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
3.கடந்த மாதம் நேபாளத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவவேதிக்கு நேபாள ராணுவ ஜெனரல் பட்டத்தை அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ராமசந்திரபௌதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பாரதிய பாஷா உத்சவ்
1.பாரதிய பாஷா உத்சவ் இந்தியாவின் மொழி பன்முகத்தன்மையை கொண்டாடும் விழாவாகும் .
2.கல்வி மற்றும் கலாச்சார பாதுகாப்பில் தாய்மொழிகளின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.
3.தேசிய கல்விக் கொள்கை 2020, இந்திய மொழிகளின் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது.
4.மராத்தி, பாலி, பிராகிருத், அசாமி, மற்றும் வங்காளி உள்ளிட்ட பல இந்திய மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.
5.மெக்காலேயின் இந்திய கல்வி குறிப்பு போன்ற வரலாற்று கொள்கைகளை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
6.பாஷா சங்கம் திட்டம் மற்றும் அனுவாதினி செயலி போன்ற தொழில்நுட்பங்களை கல்வியுடன் ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >