இந்தியாவின் முதல் கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் துறைமுகம்
- சமீபத்தில் கேரளாவில் உள்ள அதானி குழுமத்தின் விழிஞ்சம் துறைமுகத்தை இந்தியாவின் முதலாவது கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் துறைமுகமாக செயல்பட துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் துறைமுகமானது பெரிய கப்பல்களில் இருந்து சிறிய கப்பல்களுக்கு சரக்குகளை மாற்றுவதற்கு உதவுகிறது.
விழிஞ்சம் துறைமுகம் பற்றி
- இது இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகமாகும்
- சர்வதேச கப்பல் வழித்தடத்தை ஒட்டி அமைந்துள்ள நாட்டின் ஒரே துறைமுகமாகும்.
- இது இந்தியாவின் ஆழமான துறைமுகமாகும்.
- இது ஒரு பசுமை துறைமுகமாகும்.