தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

வெள்ளத் தடுப்பு திட்டங்கள்

  • சென்னையில் முன்மொழியப்பட்ட நகர்ப்புற வெள்ளத் தடுப்பு திட்டங்களுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 150 கோடி மானியத்தை அனுமதித்துள்ளது.
  • தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் மாநில அரசுக்கு முதல் தவணையாக இந்த மானியம் வழங்கப்படும்.
  • ஐந்து முக்கிய திட்டங்களுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவை:
  • சிறு நீர்நிலைகளுடன் இணைக்கப்பட்ட சில உபரி கால்வாய்களை மேம்படுத்துதல்
  • தற்போதுள்ள வடிகால் வலையமைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்ப புதிய மழைநீர் வடிகால்களை அமைத்தல்
  • ஸ்பாஞ்ச் பூங்காக்களை உருவாக்குதல்
  • எட்டு நீர்நிலைகளை புனரமைத்தல்
  • நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை தானியங்கிமயமாக்க மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கைப்பற்றல் (SCADA) அமைப்பை நிறுவுதல்.

NDMA பற்றி

  • பேரிடர் மேலாண்மைக்கான உச்ச அமைப்பாகும்.
  • தலைவர் – இந்தியப் பிரதமர்.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 ன் மூலம் தொடங்கப்பட்டது

இந்தியாவின் 30வது வெளியுறவு எல்லைப் பேச்சுவார்த்தை

  • இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்முறை பொறிமுறையின் (WMCC) 30வது கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
  • எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிம்மதியையும் கூட்டாக நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

குறிப்பு

  • சோசலிச அல்லாத நாடுகளில் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடு இந்தியா (ஏப்ரல் 1, 1950) ஆகும்.
  • இந்தியா – சீனா போர் 1962
  • அக்சாய் சின் – இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதி.

தமிழ்ப் புதல்வன் திட்டம்

  • ஆகஸ்ட் 9 அன்று கோயம்புத்தூரில் தமிழ்ப்  புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • 2024-25 ஆம் ஆண்டில் 3.28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைவர்.
  • இத்திட்டம் மாணவிகளுக்காக தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தைப் போன்றது.

தமிழ்ப் புதல்வன் திட்டம் பற்றி

  • நோக்கம் – பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே உயர்கல்வியை ஊக்குவித்தல்.
  • பயன் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1,000 நிதி உதவி வழங்கப்படும்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >

People also Read