சென்னையில் கடல்பாசி பூங்காக்கள்
சென்னையில் 2 இடங்களில் காலநிலை-எதிர்ப்பு கடல்பாசி பூங்காக்களை நிறுவுவதற்கு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை பாடி இளங்கோநகர், விளையாட்டுத்திடல் துரைப்பாக்கம் மாநகராட்சிப் பூங்கா ஆகிய இரு இடங்களிலும் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு முன் நுழைவு அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை துறைமுக வளர்ச்சி
க்ரூஸ் பாரத் திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணிக்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்.
க்ரூஸ் பாரத் திட்டம்:
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த ‘க்ரூஸ் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஆசிய உறுப்பு நாடுகளுடன் கப்பல் போக்குவரத்து தொடர்பான ஆலோசனை திட்டம் நேற்று சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
பசுமை தொழில்நுட்ப இலக்குகள்
2030க்குள், இந்தியா உலகின் முதல் 10 கப்பல் கட்டுமான மையங்களில் ஒன்றாகவும் மற்றும் 2047க்குள், உலகின் முதல் 5 கப்பல் கட்டுமான மையங்களில் ஒன்றாக இலக்கு நிர்ணயக்கபட்டுள்ளது
சுற்றுச்சூழல் கருத்துக்களை மனதில் கொண்டு கப்பல்கள் மற்றும் துறைமுகங்களில் பசுமை தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறோம்.
2050க்குள் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் பசுமை தொழில்நுட்பங்களுடன் முழுமையாக செயல்படுவதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.