தமிழ்நாடு நிகழ்வுகள்

9 மாவட்டங்களில் மகளிருக்கான புதிய விடுதிகள்

  • புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, சுரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும்.
  • 24 மணி நேரமும் பாதுகாவலர், பயோ மெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது

1,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் 

  • சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை கிராம மற்றும் நகரப்பேருந்துகளில் 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்ல முடியும்.
  • இந்த அட்டையின் மூலம், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன் பெறலாம்.
  • கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை கிடைக்கும்.
  • மேலும், கோ-ஆப் டெக்ஸ் பொருள்களுக்கு 5% தள்ளுபடி, ஆவின் பொருட்களுக்கு குறைந்த விலை, இ-சேவை மையங்களில் 10% சேவைக் கட்டணம் குறைவாக கிடைக்கும்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >