உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
- தமிழகத்தில் கனிமங்களை கொண்ட நிலங்களுக்கு நிலவரி விதிப்பதை குறித்த சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த திருத்தச் சட்டத்தின் மூலம், 13 வகை பெரிய கனிமங்கள் (பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், மாக்னசைட், காரியம்) மற்றும் 17 வகை சிறிய கனிமங்களுக்கு (கரட்டுக்கல், மணல், கல், ஆற்று மணல்) நிலவரி விதிக்கப்படுகிறது.
- பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 40 முதல் ரூ. 7,000 வரை, சிறிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ. 40 முதல் ரூ. 420 வரை வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.