சர்வதேச உறவுகள்

ஆசியான-இந்தியா மாநாடு

  • மலேசியா கோலம்பூரில் வரும் அக்டோபர் 26 முதல் 28-ஆம்தேதி வரை நடைபெற உள்ள ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் காணொலி வழியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
  • இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியத்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 1992-ஆம் ஆண்டு முதல் அதனுடனான பேச்சுவார்த்தை உறுப்பினர் உறவை இந்தியா தொடர்ந்து வருகிறது.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்
    • நிறுவப்பட்ட ஆண்டு:
    • 1967 ஆகஸ்ட் 8 (பாங்காக், தாய்லாந்து)
    • அங்க நாடுகள் (10) இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், லாவோஸ், மியான்மார், கம்போடியா, ப்ரூனே
    • இந்தியாவின் உறவு வளர்ச்சி:
    • இந்தியா 1992 ஆம் ஆண்டு ஆசியானுடன் “Sectoral Dialogue Partner” ஆனது.
    • 1996 இல் “Full Dialogue Partner” ஆனது.
    • 2002 இல் முதல் ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு கம்போடியாவில் நடைபெற்றது.
    • 2012 இல் இருதரப்புத் தொடர்பு “Strategic Partnership” ஆக உயர்த்தப்பட்டது.

    2022 – 30வது ஆண்டு கொண்டாட்டம்:

    • ASEAN–India Friendship Year ஆகக் கொண்டாடப்பட்டது
    • “Shared Values, Common Destiny” என்ற தலைப்பில் இருதரப்பு உறவை வலியுறுத்தியது.
Next Current Affairs சர்வதேச உறவுகள் >