அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பிரிட்டன்-இந்தியா மூலோபாய உரையாடல்

  • ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன்-இந்தியா இடையேயான மூலோபாய உரையாடல் லண்டனில் சமீபத்தில் நடைபெற்றது.
  • பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) செய்துகொள்வதாக இந்தியாவும் பிரிட்டனும் உறுதியளித்துள்ளன.
  • இந்தியாவும் பிரிட்டனும்  செயல்திட்டம் 2030ல் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளன.

குறிப்பு

  • பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2021 இல் செயல்திட்டம் 2030 உருவாக்கப்பட்டது.

பிரிட்டன் பற்றி

  • தலைநகர் – லண்டன்
  • மன்னர் – சார்லஸ் III
  • பிரதமர் – ரிஷி சுனக்
  • நாணயம் – பவுண்ட் ஸ்டெர்லிங்

நலத்திட்டங்கள்

இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம்

  • மத்திய அமைச்சரவை சமீபத்தில் ரூ.10,371.92 கோடி பட்ஜெட் மதிப்பிலான விரிவான தேசிய அளவிலான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டமானது செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • டிஜிட்டல் இந்தியா ஆணையத்தின் கீழ் உள்ள இந்தியாAI எனப்படும் சுதந்திரமான தொழில் பிரிவால் செயல்படுத்தப்படுகிறது

DIC பற்றி

  • இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) அமைக்கப்பட்டது.
  • குறிக்கோள் – மக்களின் நலனுக்காக ICT மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல்.
Next Current Affairs அரசியல் அறிவியல் >