விண்வெளியில் வெற்றிகரமாக காராமணி விதைகள் முளைப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் காராமணி விதைகளை வெற்றிகரமாக முளைக்க வைத்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. PSLV-C60 திட்டத்தில் அனுப்பப்பட்ட விதைகள், சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான COMPACT RESEARCH MODULE (CROPS) பரிசோதனையின் ஒரு பகுதியாக, விண்ணில் அனுப்பப்பட்ட நான்கு நாட்களுக்குள் முளைத்தன. டிசம்பர் 30 அன்று, PSLV-C60 ராக்கெட் ஏவப்பட்டு, இரண்டு SpaDeX செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது, மேலும் 24 பரிசோதனைகளுடன் POEM-4 தளத்தை சுமந்து சென்றது. அவற்றில் CROPS பரிசோதனையும் ஒன்று, இது நுண்ணீர்ப்பின் தனித்துவமான சூழலில் தாவர வளர்ச்சியை ஆராய்வதற்காக இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் இஸ்ரோ இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) ஆகஸ்ட் 15, 1969 அன்று நிறுவப்பட்டது. * இதன் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது. 1962இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவை (INCOSPAR) மாற்றியமைத்து உருவாக்கப்பட்டது. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை என கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய், இஸ்ரோவின் முதல் தலைவராக இருந்தார்.