யுத்த சேவா பதக்கம் பின்னணி : இந்திய கடற்படையால் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட போது சிறப்பாக பணியாற்றிய இரு கடற்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டது . போர்நிலையில் சிறப்பாக பணியாற்றிய உயரதிகாரிகளுக்கும் யுத்த சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டு, அதில் துணை அட்மிரல் ஏ.என். பிரமோத் ராகு கோகலே கௌரவிக்கப்பட்டார். ஆபரேஷன் சிந்துார் ஆபரேஷன் சிந்துார் என்பது பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7, 2025 அன்று இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ஒரு துல்லியமான தாக்குதல் ஆகும். இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு பல தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். நடப்பு தகவல்கள் NATO - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு நேட்டோ (NATO) என்பது அமைதி மற்றும் கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு இராணுவக் கூட்டணியாகும். இதன் 5-வது சரத்தின்படி , ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலானது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். ஏப்ரல் 4, 1949 அன்று ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த 12 நாடுகளால் நிறுவப்பட்டது. நிறுவன நாடுகள்: பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் அமெரிக்கா (USA). தலைமையகம்: பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் ஆரம்பத்தில் இருந்த 12 நாடுகளில் இருந்து தற்போது 32 நாடுகளாக விரிவடைந்துள்ளது.

