Tag: மக்கள் சேவை தளம்

தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சி / திட்டம்  மக்கள் சேவை தளம் சூழல் : முதல்வர் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் பொது மக்கள் புகார் அளிக்க பிரத்யேக செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது முதல்வர் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் பொது மக்கள் புகார் அளிக்க பிரத்யேக செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முக்கிய நோக்கம் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.  குறைகளை விரைவாக தீர்ப்பதற்கான நிர்வாக அமைப்பை வலுப்படுத்துதல்.  மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல். வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை உறுதி செய்தல் முக்கிய தகவல் மக்கள் சேவை’  தளம் மூலம் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும் புதிய முயற்சி: "மக்கள் தளம்" என்ற பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.  நோக்கம்: பொதுமக்கள் அரசின் சேவைகள், திட்டங்கள் மற்றும் குறைகளை ஒரே தளத்தில் பதிவு செய்து கண்காணிக்கும் வசதி ஏற்படுத்துதல். அரசு இணையதளம் / மின் ஆளுமை முயற்சி  முக்கிய அம்சங்கள் மக்களின் குறைகளை விரைவாகப் பெறுதல்.  மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி.  மனுக்களின் நிலையை கண்காணிக்கும் வசதி.  அரசு துறைகளின் சேவைகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்த்தல்.  வெளிப்படையான மற்றும் விரைவான நிர்வாகத்தை உருவாக்குதல்.  இத்தளத்தின் மூலம் தெரிவிக்கக்கூடிய பிரச்சினைகள் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள்  சாலை வசதி  குடிநீர் வசதி  தூய்மை மற்றும் துப்புரவுப் பணிகள்  கல்வி தொடர்பான கோரிக்கைகள்  மருத்துவ உதவிகள்  அரசு நலத்திட்டங்கள் தொடர்பான குறைகள்  வீட்டு வசதி உதவி  வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள்  வணிகம் தொடர்பான பிரச்சினைகள்