Tag: ஜி 7 மாநாடு

சர்வதேச உறவுகள்

ஜி 7 மாநாடு  2025 ஆம் ஆண்டு ஜி7 மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெற்றது.  இந்த 51வது உச்சிமாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் கலந்துகொண்டனர்.  இந்தியா உறுப்பினராக இல்லாவிட்டாலும், பிரதமர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். முக்கிய விவாத நோக்கங்கள்: அனைவருக்கும் பயனளிக்கும் பொருளாதாரங்களை உருவாக்குதல் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் எரிசக்தி பாதுகாப்பு ஜி7 எரிசக்தி பாதுகாப்பு அமர்வு ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக கனடாவில் நடைபெற்ற எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அரிய கனிமங்கள் குறித்த விளக்க அமர்வில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்றுள்ளார். ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் நவ.11, நவ.12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.