முக்கிய தினங்கள் சர்வதேச தாலசீமியா தினம் 2024 தாலசீமியா நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று சர்வதேச தாலசீமியா தினம் அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : ”Empowering Lives, Embracing Progress: Equitable and Accessible Thalassaemia Treatment for All.” குறிப்பு தேசிய கதிர் அரிவாள் இரத்த சோகை ஒழிப்பு இயக்கம் 2047 ஆம் ஆண்டிற்குள் கதிர் அரிவாள் மரபணு பரிமாற்றத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செய்திகளில் உள்ள இடங்கள் ஷிங்கு லா சுரங்கப்பாதை நிமு-பாதம்-தர்ச்சா சாலை இணைப்பில் 4.1 கிமீ தூரத்திற்கு ஷிங்கு லா சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சுரங்கப்பாதையானது லடாக்கின் எல்லைப் பகுதிகளுக்கு அனைத்து வானிலை இணைப்புகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஷிங்கு லா சுரங்கப்பாதை யோஜக் திட்டத்தின் ஒரு பகுதியாகும். யோஜக் திட்டம் பற்றி இது எல்லைப்புற சாலைகள் ஆணையத்தின் (BRO) மூலம் செயல்படுத்தப்பட்டது. நோக்கம் - சாலை உள்கட்டமைப்பை அதிகரிப்பது மற்றும் லடாக்கிற்கான இணைப்பை வலுப்படுத்துவதாகும்.