Tag: உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் எழுச்சி

அறிவியல்

விண்வெளி உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் எழுச்சி இந்திய விண்வெளித் திட்டத்தின் மாற்றம் கடந்த 12 ஆண்டுகளில், ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா மற்றும் விக்சித் பாரத் 2047 ஆகிய தொலைநோக்குப் பார்வைகளால் வழிநடத்தப்பட்டு, இந்தியா ஒரு முக்கிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தத் திட்டம் ஒரு அறிவியல் முன்னெடுப்பிலிருந்து, வளர்ச்சி, புத்தாக்கம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை ஆதரிக்கும் ஒரு மூலோபாய சொத்தாகப் பரிணமித்துள்ளது. முக்கிய விண்வெளிப் பயணங்களும் சாதனைகளும் சந்திரயான்-3 (2023) நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாகத் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது. மங்கள்யான் (2014) தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது. ஆதித்யா-எல்1 (2023) சூரியன்-பூமி L1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகமாக ஆனது. ஆஸ்ட்ரோசாட் மற்றும் எக்ஸ்போசாட் ஆகியவை விண்வெளி வானியலில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தின. SPADEX (2025) திட்டம், தானியங்கி முறையில் விண்வெளியில் இணைதல் மற்றும் பிரிதலை நிரூபித்த நான்காவது நாடாக இந்தியாவை மாற்றியது. வெள்ளிக் கோள சுற்றுக்கலன் திட்டம் 2028-ல் திட்டமிடப்பட்டுள்ளது. மனித விண்வெளிப் பயணம் மற்றும் விண்வெளி நிலையத் திட்டங்கள் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி வீரர்களை புவியின் தாழ் சுற்றுப்பாதைக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், தற்சார்பு மனித விண்வெளிப் பயணத் திறனைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். ஆக்சியம்-4 திட்டத்தில் (2025) பங்கேற்றது, விண்வெளி வீரர் பயிற்சி மற்றும் நுண்குருத்துவ ஆய்வு ஆகியவற்றில் மதிப்புமிக்க அனுபவத்தை வழங்கியது. ஐந்து தொகுதிகளைக் கொண்ட விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் (BAS), விண்வெளி தொலைநோக்குத் திட்டம் 2047-இன் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதி 2028-க்குள் ஏவப்பட உள்ளது. தனியார் பங்கேற்பின் விரிவாக்கம் 2020-ஆம் ஆண்டின் விண்வெளித் துறை சீர்திருத்தங்களும், இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ம் தனியார் துறை ஈடுபாட்டை ஊக்குவித்தன. 2014-ல் ஒன்றாக இருந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, பிப்ரவரி 2026-க்குள் 400-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிமுறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி நடவடிக்கைகளில் 100% வரை வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கின்றன. பிக்ஸல் , ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் , அக்னிகுல் காஸ்மோஸ் , துருவா ஸ்பேஸ் , மற்றும் பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்  போன்ற நிறுவனங்கள் முக்கிய நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. வணிகமயமாக்கல் மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் 'நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' (NSIL) இஸ்ரோவின் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை வணிகமயமாக்குகிறது; அதேவேளையில், 'இன்-ஸ்பேஸ்' தனியார் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர வசதி மையமாகச் செயல்படுகிறது. NSIL-இன் வருவாய் ₹321.77 கோடியிலிருந்து (2021-22 நிதியாண்டு) ₹3,246.09 கோடியாக (2024-25 நிதியாண்டு) அதிகரித்துள்ளது. தற்போது 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், அடுத்த பத்தாண்டுகளில் 40–45 பில்லியன் டாலராக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது; மேலும்,…