தினசரி தேசிய நிகழ்வுகள் அஞ்சி காட் பாலம் இந்திய ரயில்வே அஞ்சி காட் பாலத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்து ஒரு பெரும் பொறியியல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டேய்டு ரயில் பாலம் ஆகும். ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சவாலான நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பாலம், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் முக்கிய அங்கமாகும். தேசிய தின விவகாரங்கள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உயர்கல்வியில் ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. துணைவேந்தர்களை நியமிப்பதற்கான மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேடல்-கும்-தேர்வுக் குழுவை அமைக்க வேந்தர்கள் அல்லது பார்வையாளர்களுக்கு UGC வரைவு அதிகாரம் வழங்கியுள்ளது. இதனை செயல்படுத்தாவிடில், UGC திட்டங்களில் பங்கேற்பதிலிருந்து அல்லது பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குவதிலிருந்து நிறுவனம் தடை செய்யப்படலாம் என்று வழிகாட்டுதல்கள் எச்சரிக்கின்றன. இதுவரை, துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களை அரசுகள் அமைத்து வந்தன, வரைவு அங்கீகரிக்கப்பட்டால், ஆளுநர்கள் (அவர்கள் வேந்தர்களாக இருந்தால்) செயல் முறைக்கான தேடல் குழுக்களை நியமிக்க அனுமதிக்கிறது. இலவச மருத்துவ சிகிச்சை சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் மார்ச் 2025க்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.என அறிவிக்கப்பட்டுள்ளது நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி பணமில்லா சிகிச்சை திட்டத்தை அமல்படுத்தியது. சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது . கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில்80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். * சாலைகளில் விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தால் காயம் அடைந்தவருக்கு 7 நாட்கள் பணமில்லா சிகிச்சை அளிக்கபடும் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.